வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதை மட்டுமே சாப்பிட்டு 20 கிலோ கம்மியான ஜெயம் ரவி.. இது சாத்தியமா என குழம்பிய மணிரத்னம்

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமீபத்திய படம் ஒன்றுக்காக இரண்டு வாரங்களில் மொத்தம் 18 கிலோ எடை வரை குறைத்து இருக்கிறார். இதை அவரே சமீபமான பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் எடை குறைக்க அவர் என்ன செய்தார் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாகவே நடிகர்களில் விக்ரம், கமல் , சூர்யா, ஆர்யா போன்றவர்கள் படத்துக்காக உடல் எடையிலிருந்து, தோற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வருவார்கள். நடிகைகள் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்கிறார்கள். ஆனால் ரவி தன்னுடைய உடலில் சட்டென ஒரு மாற்றத்தை 14 நாட்களில் கொண்டு வந்து இருக்கிறார்.

Also read: அண்ணன் இருக்க பயமேன்.. ஜெயம் ரவிக்கு 6இல் ஐந்து சூப்பர் ஹிட் கொடுத்த மோகன் ராஜா

ரவி இப்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தான் அவர் உடல் எடையை குறைத்து இருக்கிறார். இந்த இரண்டு வாரங்களுக்கு ஜெயம் ரவி வெறும் தக்காளி, கேரட் மட்டுமே சாப்பிட்டு இருக்கிறார். வேறு எந்த வகையான உணவையும் அவர் எடுத்து கொள்ளவில்லையாம்.

ஏற்கனவே தன்னுடைய கோமாளி திரைப்படத்தில் இது போன்ற முயற்சியை எடுத்திருக்கிறார். அந்த ஒரே படத்தில் 30 வயது இளைஞனாகவும், 15 வயது மாணவனாகவும் வருவார். இதற்காகவே ரவி பயங்கரமாக வெயிட் கம்மி ஆகி இருந்தார். இந்த படம் அவருக்கு வெற்றி படமாகவும் அமைந்தது.

Also read: எதிர்பார்ப்பை கிளப்பிய 6 படங்களின் இரண்டாம் பாகம்.. ஸ்கெட்ச் போட்டு கவுத்துட்ட ஜெயம் ரவி

தன்னுடைய வெயிட் லாஸ் பற்றி அவர் கூறுகையில் தக்காளி, கேரட் மட்டுமே இரண்டு வாரங்களுக்கு எடுத்து கொண்டதாகவும், ஆனால் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வேறு யாரும் இதை முயற்சி செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இவரை சமீபத்தில் பார்த்த மணிரத்தனம் இவருடைய முயற்சியை பார்த்து இது எப்படி உங்களால் மட்டும் முடிகிறது என குழம்பி விட்டாராம்

கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் படமாக்குகிறார். இந்த திரைப்படம் தான் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம். இலக்கிய ஆர்வலர்கள் அனைவர்க்கும் பிடித்த அருள்மொழிவர்மரின் கதாபாத்திரத்தில் இவர் நடித்து கொண்டிருக்கிறார்.

Also read: ஜெயம் ரவியிடம் அறிவுரை கேட்ட அஜித்.. நல்லது சொல்றதுக்கு வயசு தேவையில்ல

Trending News