ஜெயம் ரவியின் கடைசி நான்கு படங்களை அவரது மாமியார் தான் தயாரித்துள்ளார். சுஜாதா விஜயகுமார் இவர் ஜெயம் ரவி மனைவியின் தாயார். சைரன், அடங்கமறு, பூமி,, வீராப்பு போன்ற படங்களை தயாரித்தவர் இவர்தான்.
ஜெயம் ரவிக்கு கடைசியாக வெளிவந்த படம் சைரன் . இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடாவிட்டாலும் தயாரிப்பாளர் தரப்புக்கு லாபம் என்று கூறப்படுகிறது. தற்சமயம் ஜெயம் ரவி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் “காதலிக்க நேரமில்லை” படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் பல வெற்றி படங்களை கொடுத்தவர். பசங்க , நம்ம வீட்டு பிள்ளை கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவர் ஜெயம் ரவியை அணுகி ஒரு கதை சொல்லி இருக்கிறார். அதை அவர் மாமியார் தான் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக பாண்டிராஜ் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ்சும் வாங்கியுள்ளார்.
இந்த படம் 52 கோடி பட்ஜெட்டில் அவர் மாமியார்சுஜாதா விஜயகுமார் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஜெயம் ரவி, மாமியார் என்று கூட பாராமல் 25 கோடிகள் சம்பளம் கேட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு எந்த படமும் ஓடவில்லை, எப்படி 25 கோடி கொடுக்க முடியும் என மாமியார் தரப்பு சண்டை போட்டு உள்ளது.
குடும்பத்திற்குள் வந்த கடும் புகைச்சல்
இயக்குனர் பாண்டிராஜிடம் படத்தின் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுங்கள் என ஜெயம் ரவியின் மாமியார் கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் நான் வேறு ஹீரோவை பார்த்துக் கொள்கிறேன் என விஜய் சேதுபதியிடம் போய்விட்டார்.
இப்படி நல்ல இயக்குனர்களிடம் 25 கோடிகள் சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி. என்னதான் மாமியார் படமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேற என்ற நோக்கத்தில் இப்படி பேசியுள்ளது குடும்பத்திற்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயம் ரவிக்கு வார்னிங் கொடுத்த ஏஜிஎஸ்
- ஜெயம் ரவியை ஆட்டிப்படைக்கும் மாமியாரின் ராசி
- பிளாப் நாயகன் ஜெயம் ரவிக்கு அடித்த ஜாக்பாட்