Ethirneechal: ரேணுகாவிற்கு மொத்த குடும்பமும் ஆதரவாக நிற்கிறது. நடன பள்ளியில் எந்த ஒரு தப்பும் இல்லை அங்கே செல்லலாம் என மொத்த குடும்பமும் ரேணுகா சப்போர்ட் பண்ணுகிறது. தப்பான நோக்கத்தோடு வட்டிக்காரன் இல்லை, அவன் பிள்ளையை அவன் நடனம் கற்றுக் கொள்ள அனுப்புகிறான், நல்லவனாக தான் இருப்பான் என ஜனனி, ரேணுகாவிற்கு ஒரு தெம்பு கொடுத்து பேசுகிறார்.
இதனை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷினி, என் அப்பாவை விட மோசமான ஆளாக யாரும் இருக்க மாட்டார்கள் என உண்மையை போட்டு உடைக்கிறார். மொத்த குடும்பமும் ஷாக் ஆகி செய்வதறியாமல் நிற்கிறது. தர்ஷினி தன்னை கடத்தியது முதல் அங்கே என்ன நடந்தது என எல்லாவற்றையும் கூறுகிறார்.
அப்பா தான் என்னை கடத்தி வைத்திருந்தார். யாரோ முகம் தெரியாத ஒருவனிடம் என்னை அடைத்து வைத்திருந்த கேவலமான மனிதன் தான் அவர், என தான் அனுபவித்த கஷ்டங்களை கூறிவிட்டார். இவரை விட ஒரு மோசமான மனிதனை பார்க்க முடியுமா எனக் கூறி ரேணுகாவை நடன பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறார்.
அப்பத்தா முதல் குணசேகரன் வரை கீழே இருந்து இதனை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பத்தா மனசுக்குள்ளேயே குணசேகரன் பற்றிய செய்திகளை எல்லாம் வைத்துக் கொள்கிறார். இதனிடையே அண்ணன் என்று கூறிக்கொண்டு ஜான்சி ராணி வீட்டுக்குள்ளே வருகிறார்.
ஜான்சிராணி, குணசேகரனுக்கு வாயில் வெற்றிலை பாக்கு கொடுப்பது போல் குடும்ப பெண்களைப் பற்றிய அவதூறு கூறிவிட்டு பணம் கேட்கிறார். எட்டப்பன் வேலை செய்ததற்கு குணசேகரன் 500ரூபா கட்டுக்களை வீசுகிறார்.
தாரா பாப்பா வீட்டை விட்டு வெளியே போ என்று ஜான்சி ராணியை விரட்டுகிறார். பாப்பாவை அடிக்க போன ஜான்சி ராணியை தர்ஷினி கழுத்தை பிடித்து சூடோ லாக் செய்து மன்னிப்பு கேட்க வைக்கிறார்.