Jigarthanda Double X Twitter Review: இந்த வருடம் தீபாவளி சரவெடியாக கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா 2 அதிரி புதிரியாக வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் ட்ரைலர், டீசர் உள்ளிட்டவை ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. அது தற்போது பூர்த்தியானதா என்பதை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கருத்துக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் கூட்டணி இப்போது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அசத்தல் திரைக்கதையை கொடுத்து மிரட்டி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அதிலும் அந்த இடைவேளை காட்சி புல்லரிக்கும் வகையில் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அதேபோன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாதி பக்கம் என்டர்டெயின்மெண்ட் என்றால் இரண்டாம் பாதி முழு எமோஷனலாக செல்கிறது.

அதுவே கிளைமாக்ஸ் காட்சியில் கனெக்ட் ஆகி ஒர்க்கவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் லாரன்ஸ் மீது ஒட்டிக் கொண்டிருந்தாய் பேய் பட இமேஜும் மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு அசத்தலாக இருக்கிறது.

அவருக்கு இணையாக நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவும் ஸ்கோர் செய்திருக்கிறார். அதனாலேயே இப்படம் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் இந்த தீபாவளிக்கு சரவெடி பட்டாசாக வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா 2 அடுத்தடுத்த நாட்களிலும் திரையரங்குகளை தெறிக்க விடும் என தெரிகிறது.

Also read: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை அவிழ்த்துவிட்ட தனுஷ்