ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜிகர்தண்டா டபுள் X படத்திற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. வசூல் விவரத்துடன் வெளியான ரிப்போர்ட்

Jigarthanda Double X Movie Collection and Celebrities Salary: தீபாவளி ஸ்பெஷல் ஆக கடந்த வாரம் 10ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். முரட்டு வில்லன் கையில் சிக்கிய அப்பாவி இயக்குனரின் கதைதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு கிடைத்த வசூலில் பாதிக்கு பாதியை இந்த படத்தில் நடித்த பிரபலங்களுக்கு சம்பளமாக கொடுத்திருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. இதில் முரட்டு வில்லனாக நடித்த ராகவா லாரன்ஸுக்கு 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில் என்ன கதை இருந்ததோ அதை தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் வடிவமைத்த  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு சம்பளமாக 7 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அப்பாவி இயக்குனராக படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யாவிற்கு  5 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: எஸ்ஜே சூர்யா வேண்டாம்னு சொல்லிட்டேன்.. படம் ஹிட்டானதும் சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட டாப் இயக்குனர்

ஜிகர்தண்டா டபுள் X நடிகர் நடிகைகளின் சம்பளம் 

இந்த படத்தில் நடித்த கதாநாயகி நிமிஷா சாஜயனுக்கு 2 கோடியும், காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு 50 லட்சமும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நடிகர் நடிகைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட 25 கோடியை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல், ரிலீஸ் ஆன முதல் தற்போது வரை பத்து நாட்களில் 52 கோடியை பாக்ஸ் ஆபிஸில் நிரப்பி இருக்கிறது. படத்தின் வசூலில் பாதியை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு சம்பளமாக வாரி இறைத்திருக்கின்றனர். எப்படியோ! போட்ட காசை விட ஒரு மடங்கு லாபம் பார்த்து விட்டோம் என்று தயாரிப்பு நிறுவனம் பெருமூச்சு விடுகிறது.

Also read: எஸ்ஜே சூரியாவின் ட்ராக்கை மாற்றிய இயக்குனர்.. பிரஸ் மீட்டில் ஓப்பனாக பேசிய நடிப்பு அரக்கன்

Trending News