விஜய் டிவியில் கடந்த 1200 எபிசோடுகளையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து போன ஜீவா மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதனால் மீனாவின் அப்பா என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் படியாக ஜீவாவின் நிலைமை ஆகிவிட்டது.
தற்போது ஜனார்த்தன் காரணமே சொல்லாமல் சர்டிபிகேட் வேணும் என்று சொன்னதால் அதை எடுப்பதற்காக மீனா மற்றும் ஜீவா அண்ணன் வீட்டுக்கு போயிட்டு தனத்திடம் வாங்கிட்டு வந்து விட்டார்கள். ஆனாலும் ஜீவா மட்டும் உள்ளே போகாமல் வெளியே நின்று கொண்டிருப்பதை பார்த்த தனம் மிகவும் ஏக்கத்துடன் எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆகிட்டே என்று மன வருத்தத்துடன் முல்லையிடம் கூறுகிறார்.
Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்
அடுத்ததாக சூப்பர் மார்க்கெட் தற்போது ஜீவா பொறுப்பில் இருப்பதால் அதில் சில மாற்றங்களை செய்ததால் ஜனார்த்தன் நீங்கள் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் என்னிடம் கேட்டு தான் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அது ஜீவாவின் மனதிற்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்து இருக்கிறது. இதைப் பற்றி மீனா விடம் என்கிட்ட பொறுப்பை ஒப்படைத்த பிறகு என்னை நம்பாமல் இந்த மாதிரி சொல்வது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கிறது என்று கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஜனார்த்தன் மறுபடியும் ஜீவாவிடம் என்னிடம் கேட்காமல் இங்கு வேலை பார்த்து ஆட்களை ஏன் மாற்றி விட்டீர்கள் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறார். அதற்கு ஜீவா அந்த பொருட்கள் தரம் இல்லாமல் இருந்ததால் நான் நிறுத்தி விட்டேன் என்று பதில் அளிக்கிறார். உடனே ஜனார்த்தன், ஒருத்தர் தப்பு செஞ்சா எல்லாரும் தப்பாக தான் இருப்பாங்க என்று நினைக்க கூடாது.
Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன
இந்த மாதிரி விஷயத்தை முடிவெடுக்கும் முன் என்னிடம் கேட்டுவிட்டு அதுக்கு அப்புறம் முடிவு எடுங்கள் என்று சொல்கிறார். இப்படி தொடர்ந்து ஜனார்த்தன் சொல்வது ஜீவாக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது. இதுவே இவர் யோசிக்க வைக்கும் விஷயமாக அமையப்போகிறது. இப்படி இவர் வீட்டில் இருப்பதற்கு பேசாம நம் அண்ணன் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ என்று யோசிக்கிறார் போல.
அடுத்ததாக கண்ணன் ஐஸ்வர்யா க்கும் பண பிரச்சனை வருவதால் கண்ணன் இப்பவாவது திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. இப்படி பிரிந்து போன தம்பிகளுக்கு ஒவ்வொரு பிரச்சனையும் கொடுத்து கூட்டு குடும்பமே பெஸ்ட் தான் என்று சொல்லும் விதமாக இக்கதை அமைந்து வருகிறது. அத்துடன் இந்த நாடகமும் முடிவுக்கு வர இருக்கிறது.
Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி