சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நடிகராகுவதற்கு முன் 5 டாப் நடிகர்கள் செய்த வேலைகள்.. சாவுக்கு கூத்தாடிய ஹீரோ 

Tamil Actors: சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தான் நடிகர்களாக மாறினார்கள். ஆனால் இவர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே வேறு ஒரு வேலையை பார்த்திருக்கின்றனர். அதற்கும் சினிமாவிற்கும் சுத்தமாகவே சம்பந்தம் இருக்காது. அப்படி 5 நடிகர்கள்  சினிமாவிற்கு வருவதற்கு முன் என்ன வேலை பார்த்தனர் என்பதை பார்ப்போம்.

பரத்: சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பரத், தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகராக உயர்த்திக் கொள்ள பார்க்கிறார். ஆனால் தற்போது வரை வளரும் நடிகராகவே இருக்கக்கூடிய பரத், இருவரை 50 படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் அதற்கு சரியான அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை .பரத் சினிமாவிற்கு வருவதற்கு முன் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

நவ்தீப்: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, பிரகாஷ்ராஜ் உடன் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு  என்ட்ரி கொடுத்தவர்தான் நடிகர் நவ்தீப். இவர் தமிழில் மட்டுமல்லாமல்தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் வங்கி ஊழியராக பணி புரிந்துள்ளார்.

Also Read: மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிவிட்டார்.. மொத்தத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என கூறிய உதயநிதி

 வைபவ்: சரோஜா படத்தின் மூலம்  நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வைபவ், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரும் முன்னணி நடிகராக மாறுவதற்கு  பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும், தற்போது வரை வளரும் நடிகராகவே பார்க்கப்படுகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்த வைபவ், நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துள்ளார்.

விஜய் சேதுபதி: தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நடிகருள் ஒருவர். இவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், வயதான முதியவர், திருநங்கை என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பிச்சு உதறி கொண்டு இருக்கிறார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் பாஸ்புக் கடையில் வேலை பார்த்துள்ளார்.

Also Read: ஒரே படத்தால் எல்லா கடனையும் அடைக்கும் நடிகர்.. பழைய படங்களை தூசி தட்டி வெளியிட காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்!

வடிவேலு: 90களில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி, அதன் பிறகு தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்பினால் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் வைகைப்புயல் வடிவேலு. பின்பு இவர் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கி தற்போது மீண்டும், தன்னுடைய செகண்ட் இன்னிசை துவங்கியிருக்கிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன்னன் படத்தில் இவரை குணச்சித்திர நடிகராக பார்ப்பதற்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் சாவுக்கூத்துக்கு நடனம் ஆடுபவர் ஆக இருந்துள்ளார். 

Also Read: சிம்பு இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு. . மாமன்னன் படத்தால் அடித்த ஜாக்பாட்

Trending News