வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாத்தியமில்லாததை விஜய் இடம் திணிக்கும் வலது கரம்.. யார் அந்த ஜான் ஆரோக்கியசாமி

Vijay Right hand in politics: விஜய் பெரிய ரிஸ்க் எடுத்து அரசியலில் இறங்கியுள்ளார். தளபதி 69 தான் கடைசி படம் என்று ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ரசிகர் மன்ற தலைவர்களிடம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.மற்ற கட்சிகளிடமிருந்து தனித்து விளங்குமாறு அறிவுரை கூறி வருகிறார்..

மற்ற கட்சிகளில் இருப்பது போல் நான்கு திறமையான பேச்சாளர்களை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஏற்கனவே படித்த ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்தது போல் இப்பொழுதும் மற்றும் ஒரு கூட்டத்தை உருவாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கூடிய விரைவில், நன்றாக படித்து மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கவும், அவர்களின் மேற்படிப்புக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வரவும் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு இருக்கிறார். எப்படி அரசியலில் பிரசாந்த் கிஷோர் ஒரு பெரிய ஆலோசகரோ அதேபோல் விஜய் இடமும் ஒருவர் இருக்கிறார்.

வலதுகரமாக செயல்படும் ஜான் ஆரோக்கியசாமி

விஜய்க்கு அரசியலில் வலதுகரமாக செயல்படுபவர் ஜான் ஆரோக்கிய சாமி. இவர்தான் இப்பொழுது அரசியல் சம்பந்தமான திட்டங்களை விஜய்க்கு சொல்லியும் கற்றும் கொடுத்து வருகிறார். தற்சமயம் ஆரோக்கியசாமி ஒரு பெரிய முயற்சியில் இறங்கியும் உள்ளார். அதாவது விஜய்யின் டி வி கே மற்றும் நாம் தமிழர் கட்சி இரண்டையும் ஒன்று சேர்க்க திட்டம் தீட்டி வருகிறார்

இவ்விரு கட்சிகளின் செயல்பாடுகள் ஒருமனதாகவே இருக்கிறது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் சீமானும் துடிக்கிறார். அதனால் இரண்டு துருவங்களையும் ஒன்றாக செயல்பட வைக்கும் திட்டத்தை வகுத்து வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி.

விஜய்க்கு எப்படி பார்த்தாலும் இந்த அரசியல் ஆரம்பம் ஒரு பெரிய ரிஸ்க் தான். எல்லாத்துக்கும் துணிந்து தான் இறங்கியுள்ளார் தளபதி. மத்தியில் பிஜேபி நிச்சயமாக அவருக்கு குடைச்சல் கொடுக்கும். இதற்கெல்லாம் அவருக்கு தோள் கொடுக்க பலமாய் ஒரு கூட்டணி வேண்டும். அதனால் ஜான் ஆரோக்கியசாமி கூட்டணி அமைக்குமாறு விஜய் இடம் ஆலோசித்து வருகிறார்.

TVK அறிவித்தபின் தளபதியை தேடி வந்த வெற்றிகள்

Trending News