Johnny Master: அண்மைக்காலமாகவே திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் மீது அடுத்தடுத்த அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது அப்படித்தான் காவாலயா உட்பட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
16 வயதிலேயே ஜானி மாஸ்டர் தனக்கு அந்தரங்க தொல்லை கொடுத்ததாகவும், தன்னை அவர் தாக்கியதாகவும் உதவி நடன இயக்குனர் புகார் தெரிவித்திருந்தார். அதை அடுத்து நடந்த விசாரணையில் ஜானி மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்ததற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலத்தில் இடம்பெற்று இருந்த மேகம் கருக்காதோ பாடலுக்கு இவர் நடனம் அமைத்திருந்தார்.
தேசிய விருது வாங்க வரும் ஜானி மாஸ்டர்
நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடலின் நடன அசைவுகளுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த விழா இந்த மாதம் நடைபெற இருப்பதால் விருதை பெறுவதற்காக ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி வரும் 6ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அவருக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. மேலும் இதற்காக இரண்டு பேர் தலா இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு எதற்காக ஜாமீன் அதிலும் விருது வாங்குவதற்காக அவரை வெளியில் செல்ல அனுமதி இருப்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
ஜானி மாஸ்டருக்கு கிடைத்த ஜாமீன்
- குண்டை தூக்கி போட்ட ஜானி மாஸ்டர்
- இளம் பெண் பகீர் குற்றச்சாட்டு
- அந்தரங்க டார்சரை தாண்டி ஜானி மாஸ்டர் செய்த மட்டமான வேலை