ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் கொடுத்த ஜெயிலர் ரிவ்யூ.. பத்திரிக்கையாளர் ஷோவில் நடந்த கலாட்டா

Jailer Journalist Review: ஜெயிலர் படம் பத்திரிக்கையாளர்களுக்கு என்று சென்னையில் சில இடங்களில் ஆங்காங்கே திரையிடப்பட்டு இருக்கிறது. எப்போதுமே பத்திரிக்கையாளர்கள் ஒரு படத்தை பார்க்கும் கோணமும், ரசிகர்கள் பார்க்கும் கோணமும் வேறாகத்தான் இருக்கும். அதாவது ஆர்ப்பாட்டம் இல்லாமல் படத்தின் கதையை கூர்ந்து கவனிப்பார்கள்.

மேலும் படத்தில் இடம்பெற்ற நிறைகள் மற்றும் குறைகள் மட்டும் தான் பார்ப்பார்கள். அதை தங்களது ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிட்டு வருகின்றனர். பெரும்பாலும் பத்திரிக்கையாளர்களின் கருத்து ரசிகர்களுடன் ஒன்றிபோய் தான் இருக்கும். இந்நிலையில் நேற்று ஜெயிலர் படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் சென்றுள்ளனர்.

Also Read : ரஜினியையே ஆட்டம் காண வைத்த மலையாள நடிகர்.. ஜெயிலரில் ஸ்கோர் செய்த ஒத்த சிங்கம்

இது பற்றி பிரபல பத்திரிக்கையாளர்களான வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் ஜெயிலர் படத்தை பார்த்த அனுபவத்தை கூறி இருக்கிறார்கள். அதாவது முன்பு இல்லாத அளவுக்கு ஜெயிலர் ஷோ ரொம்ப கலகலப்பாக போனதாம். அவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்பதை மீறி படத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.

மேலும் பிஸ்மி மற்றும் அந்தணன் இருவரும் மற்ற இடங்களுக்கும் போன் செய்து ஜெயிலர் படம் எப்படி இருந்தது என விசாரித்து உள்ளனர். அங்கேயும் இதே போன்று தான் கலகலப்பாக படத்தை பார்த்து பத்திரிக்கையாளர்கள் ரசித்திருந்தனராம். இதன் மூலம் கண்டிப்பாக ரஜினி ரீ என்ட்ரி கொடுப்பார் என பத்திரிக்கையாளர்கள் அடித்து கூறுகிறார்கள்.

Also Read : மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்த நெல்சன்.. ஓவர் வன்முறையால் ரசிக்க முடியாமல் போன ஜெயிலர்

மேலும் மற்ற ரசிகர்கள் ஜெயிலர் படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் கொடுத்தாலும் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நல்ல விமர்சனம் தான் ஜெயிலர் படத்திற்கு கிடைத்திருக்கிறது. ஆகையால் நடுநிலையான பத்திரிக்கையாளர்கள் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறார்கள்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் நடிப்பு செம மாசாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். முதல் பாதி மிகவும் சுவாரசியமான கதைகளைத்துடன் நகர்ந்த நிலையில் இடைவெளி அற்புதமாக உள்ளது. பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் படம் ஜெயிலர் தான் என்று கூறியுள்ளனர்.

Also Read : ஜெயிலரில் கதையோடு ஒட்டாத 5 கதாபாத்திரங்கள்.. மில்க் பியூட்டியை வேஸ்ட் பீஸ் ஆக்கிட்டியே நெல்சா

Trending News