ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

படிப்பு வரலைன்னா என்ன இந்த விஷயத்தில் ஜோவிகா கெட்டிக்காரி.. விஜயகுமாரை வம்பு இழுத்த வாரிசு

Jovika Vijayakumar: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே குழாயடி சண்டை போல் பிரச்சனை வெடித்து வருகிறது. அதுவும் வனிதாவின் மகள் ஜோவிகா நேற்று தரமான சம்பவம் செய்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போதே தனக்கு படிப்பு வரவில்லை ஆனாலும் சினிமாவில் ஆர்வம் இருப்பதால் அதை நோக்கி செல்வதாக கூறியிருந்தார்.

மேலும் ஜோவிகாவுக்கு சினிமா ஒன்றும் புதிது கிடையாது. ஏனென்றால் அவரது தாத்தா, பாட்டி, மாமா, சித்தி, அம்மா என பலரும் அவர்களது குடும்பத்தில் இருந்து சினிமாவில் நன்கு பரிச்சயமானவர்கள் தான். இந்நிலையில் ஆரம்பக் கல்வி என்பது எல்லோருக்கும் முக்கியம் என விசித்ரா விவாதம் செய்திருந்தார்.

Also Read : அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

அப்போது பேசிய ஜோவிகா படிப்பு மட்டுமே முக்கியம் என்று சில மாணவர்கள் தப்பான முடிவை நோக்கி செல்கிறார்கள். அது தவறு என்பதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சியின் கலந்து கொள்கிறேன் என்று பேசியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் நான் தாத்தா, பாட்டியை நம்பி வரவில்லை என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஜோவிகாவுக்கு படிப்பு வரவில்லை என்றாலும் சமையலில் கை தேர்ந்தவர். வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எவ்வாறு பட்டையை கிளப்பினாரோ அதேபோல் ஜோவிகா யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அதில் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வயதில் இப்படி ஒரு திறமையா என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

Also Read : கமலின் இன்றைய பஞ்சாயத்துக்கு வரும் 3 முக்கியமான விஷயங்கள்.. தாய்க் கிழவியுடன் செம டோஸ் வாங்க போகும் கேப்டன்

அதோடு மட்டுமல்லாமல் தனது அம்மா நடத்தும் துணி கடையில் இவரும் உதவியாக இருந்து வருகிறார். சினிமா மீது ஆர்வம் உள்ளதால் அதற்கான வாய்ப்பை பிக் பாஸ் மூலம் ஜோவிகா பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று சந்தடி சாக்கில் தனது தாத்தாவையும் வம்புக்கு இழுத்திருந்தார்.

ஆனால் ஜோவிகா தனது தாத்தா விஜயகுமார் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற ஆசையினாலும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். எப்போதுமே போட்டியாளர்களை சந்திக்க அவரது குடும்பங்கள் வரும். அந்த வகையில் கமலை பேச வைத்து விஜயகுமார் குடும்பத்தை வரவைக்கும் முடிவில் விஜய் டிவி இருக்கிறது.

ஆனால் வனிதாவை மொத்தமாக அவர்களது குடும்பம் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆகையால் ஆண்டவரே கேட்டுக் கொண்டாலும் ஜோவிகாவை பார்க்க பிக் பாஸ் குடும்பத்திற்கு விஜயகுமார் குடும்பம் வருவது கடினம் தான். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜோவிகா திறமையாக விளையாண்டு வருகிறார்.

Also Read : பிக் பாஸ் பிரதீப்புக்கு இப்படி ஒரு பிரச்சனையா?. SJ சூர்யாவுக்கு இருக்கும் அதே விசித்திரமான மனநோய்

Trending News