வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜூலிக்கு இப்படி ஒரு முகமா.. நல்ல விஷயத்தை விட கெட்ட விஷயம் வேகமா பரவுதே

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, அதன்பின் பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சி கலந்துகொண்டு பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி ஓவியாவிடம் பொய் பித்தலாட்டம் செய்தபிறகு ரசிகர்களுக்கு ஜூலியை பிடிக்காமல் போய்விட்டது.

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஏகப்பட்ட கிண்டல் கேலிக்கு ஆளாக ஜூலி, தற்போது அதை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று மீண்டும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் தற்போது கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ‘உங்களுக்கு இங்கே என்ன வேலை’ என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, ஒரு அணி செய்தியாளர்களாகவும் மற்றொரு அணி நட்சத்திர பிரபலங்கள் ஆகவும் மாறி பேட்டி அளிக்க வேண்டும். இதில் ஜூலி நட்சத்திர பிரபலமாக இருந்து பேட்டி அளிக்கும் போது, அவர் வெளியுலகத்தில் யாருக்கும் தெரியாமல் செய்திருக்கும் உதவியை தெரியப்படுத்தியுள்ளார்.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் உடன் வெளியே வந்த ஜூலி, ஒரு தொண்டு நிறுவனத்தில் இருக்கும் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சுமார் 23 லட்சம் தேவைப்பட்டிருக்கிறது.

அப்போது ஜூலி தாமாக முன்வந்து அதை மக்களிடமிருந்தும் சோஷியல் மீடியாவின் வாயிலாகவும் பணத்தை சேகரித்து அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய உள்ளாராம். இந்த விஷயத்தை ஜூலி இன்றுவரை யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு சொந்த வீடுகூட இல்லாத நிலையில் ஜூலி இது போன்ற சமூகத் தொண்டாற்றுவதை நினைத்து பெருமைப் படுகிறாராம்.

ஒருவர் செய்கிற நல்ல விஷயம் வெளியே வராது. ஆனால் அவர் செய்த சிறு சிறு தவறுகள் கூட ஈஸியாக பரவி பிறருடைய கேலிக்கூத்து ஆளாகி விடுகின்றனர் என்றெல்லாம் பேசி தன்னுடைய தரப்பில் இருக்கும் நியாயத்தை தற்போது ஜூலி அல்டிமேட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். இதன்பிறகு ஜூலியை பிக்பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள தயாராகுவார்களா என பார்ப்போம்.

Trending News