திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முழு நேர திருடியாக மாறிய ஜூலி.. சேஃப்டி பண்ற இடமா அது! அட கருமமே

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது திருடன், போலீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் முரட்டுத்தனமாகவும், ஆவேசமாகவும் விளையாடி வருகின்றனர்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பல பொருட்களும் சேதமாகி வருகிறது. அதிலும் களவாணிகளாக இருக்கும் போட்டியாளர்கள் செய்யும் அட்ராசிட்டி மிகவும் அதிகமாக இருக்கிறது. இதில் ஜூலி செய்த ஒரு செயல் தற்போது பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதாவது திருடர் கூட்டத்தில் ஒருவராக இருக்கும் ஜூலி போட்டியாளர் ஒருவரின் நகையை திருடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஜூலி படுக்கை அறைக்கு யாரும் இல்லாத நேரம் பார்த்து சென்று அங்கு இருக்கும் ஒரு நகையை ஆட்டையை போடுகிறார்.

அப்படி ஆட்டையைப் போட்ட அந்த நகையை ஜூலி யாருக்கும் தெரியாமல் தனது ஆடைக்குள் ரகசியமாக மறைத்து வைக்கிறார். யாருக்கும் தெரியாது என்று நினைத்த ஜூலி அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் கேமராவையும் மறந்துவிட்டார் போல. இதை மறக்காமல் கேமராவும் படம் பிடித்து விட்டது.

இது இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதால் இதுபோன்ற கேவலமான காட்சி எல்லாம் நாம் பார்க்கும் படி ஆகிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் உனக்கு ஒளித்து வைப்பதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என்று ஜூலியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும் அவர் திருடியது நிச்சயம் வனிதாவின் நகையாக தான் இருக்கும். இதனால் ஏற்கனவே ஜூலியை தரக்குறைவாகப் பேசும் போட்டியாளர்கள் இன்னும் வைத்து செய்யப் போகிறார்கள் என்று தெரிகிறது. சும்மாவே ஆடும் வனிதா இப்போ ஜூலியை என்ன செய்ய போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

julie
julie

Trending News