Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

குபேரா படத்தை கிளோஸ் செய்ய வரும் 4 படங்கள்.. ஜூன் 27 தியேட்டரில் கலைகட்ட வரும் ஹீரோக்கள்

குபேரா படத்தை கிளோஸ் செய்ய வரும் 4 படங்கள்.. ஜூன் 27 தியேட்டரில் கலைகட்ட வரும் ஹீரோக்கள்

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் குபேரா படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குப் போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் மொத்த தியேட்டரையும் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்த வாரம் 27ஆம் தேதி 4 முன்னணி […]

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் குபேரா படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குப் போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் மொத்த தியேட்டரையும் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்த வாரம் 27ஆம் தேதி 4 முன்னணி ஹீரோக்களின் படங்கள் தியேட்டர்களில் பங்கு போட வருகிறது..

கண்ணப்பா: தெலுங்கு ஜாம்பவான் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் படம் இது. புராண கதையாக உருவாகியுள்ள இந்த படம் சிவபக்தர் கண்ணப்பாவின் வாழ்க்கையை தழுவி எடுத்தது. மோகன்லால், பிரபாஸ் போன்றவர்கள் இதில் கேமியோ ரோலில் நடிக்கிறார்கள்.

லவ் மேரேஜ்: சங்கரிடம் அசிஸ்டன்டாக பணிபுரிந்த புதுமுக இயக்குனர், சண்முகபிரியன் என்பவர் இயக்குனராக அவதாரம் எடுத்த படம் லவ் மேரேஜ். இதில் நடிகர் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். ரமேஷ் திலக், அருள்தாஸ், சத்யராஜ் போன்றவர்கள் இதில் நடிக்கிறார்கள்

மார்கன்: சமீபகாலமாக விஜய் ஆண்டனி ஒரு விதமான கருப்பு பெயிண்ட் பூசப்பட்ட தோளுடன் உலா வருகிறார். இந்த படத்திற்கு தான் அந்த கெட்டப். இயக்குனர் லியோ ஜான்பால் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரகனி, பிரகீடா, போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்து, தயாரித்தும் உள்ளார் விஜய் ஆண்டனி.

மா: சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவரப்போகும் இந்த படத்தில் நடிகை கஜோல் நடித்துள்ளார். இந்த படத்தை அவரின் கணவர் அஜய் தேவகன் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஜூன் 27ஆம் தேதி இதுவும் திரைக்கு வர இருக்கிறது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.