வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜூன் மாத ரிலீசுக்கு காத்திருக்கும் 7 படங்கள்.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரும் மாமன்னன்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பதை தெரிந்து கொள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த ஜூன் மாதம் ஏழு படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதில் ஒரு சில படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியும் இருக்கிறது.

காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்: நடிகர் ஆர்யா நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம். இந்த படத்தில் ஆர்யா பருத்திவீரன் கார்த்தி கெட்டப்பில் இருக்கிறார். முழுக்க முழுக்க ராமநாதபுரம் பகுதியில் பின்னணியை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தணிந்தது காடு பட ஹீரோயின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் வரும் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Also Read: 8 வருடம் பட்டும் புத்தி வரல.. ஓவர் திமிரு காட்டியதால் வடிவேலுவை தூக்கி எறிந்த நடிகர்கள்

வீரன்: ஹிப் ஹாப் தமிழா ஆதி மற்றும் வினய் ராய் நடிப்பில் ரிலீசாக இருக்கும் திரைப்படம் வீரன். இந்த படம் வரும் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தன்னுடைய 15 வது வயதில் மின்னல் தாக்கி கோமாவில் பல வருடங்கள் இருக்கும் இளைஞன் கோமா தெளிந்து எழுந்ததும், தனக்கு அந்த மின்னல் மூலம் மாய சக்திகள் கிடைத்ததை உணருகிறான். அதை அவன் எப்படி உபயோகப்படுத்துகிறான் என்பதுதான் படத்தின் கதை.

டக்கர்: சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு தமிழில் ரிலீசாக இருக்கும் திரைப்படம் டக்கர். இந்த படத்தில் சித்தார்த் ஆக்சன் ஹீரோவாக களமிறங்குகிறார். இந்த படம் வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஒரு சாதாரண இளைஞன் பணக்காரனாக ஆசைப்படுவதால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த படத்தின் கதை.

போர் தொழில்: சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் போர் தொழில். இந்த படம் வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. குற்றப் பின்னணியின் விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எது. ஒரு கொலைகாரன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவன் செய்த கொலையைப் படிக்கணும் என்று வரும் இந்த படத்தின் வசனம் சினிமா ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றிருக்கிறது.

Also Read:மாமன்னன் படம் ஓட வாய்ப்பே இல்ல.. இப்பவே உதயநிதி, வடிவேலு தலையில் இடியை இறங்கிய பிரபலம்

விமானம் : சமுத்திரகனி மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விமானம். விமானத்தில் செல்ல வேண்டும் என்ற தன் மகனின் ஆசையை நிறைவேற்ற தந்தை முயற்சிப்பது தான் இந்த படத்தின் முழு கதை. இந்த படம் வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தலைநகரம் 2: கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி மற்றும் சுராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தலைநகரம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது ரிலீசாக இருக்கிறது. தலைநகரம் 2 என ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் மீண்டும் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்திருக்கிறார்கள். இந்த படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாமன்னன்: கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த படம் தான் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் ஆகும். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவின் கேரக்டர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மாமன்னன் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Also Read: மாரி செல்வராஜின் சக்சஸ் ஃபார்முலா.. மாமன்னன் வடிவேலுவை நம்பி தல தப்புமா!

Trending News