திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மகாநதி சீரியல் போலவே விஜய் டிவியில் அட்டகாப்பி அடிக்கும் மற்றொரு சீரியல்.. வேற கதையே இல்லையா பாஸ்

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் மக்களின் பேவரிட் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருவதால் இவர்களுடைய ஜோடி பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் இவர்களுக்கான டிராக் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்த்த நிலையில் புதுசாக வெண்ணிலா என்ற ஒரு கேரக்டரை கொண்டு வந்து விட்டார்கள்.

அந்த வகையில் விஜய்யின் முன்னாள் காதலி வெண்ணிலா, தற்போது சுயநினைவு இல்லாமல் ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகவும் குடும்பத்தில் இருப்பவர்கள் இறந்து போய்விட்டதாகவும் காவிரிக்கு தெரிந்து விட்டது. உடனே காவிரி, வெண்ணிலாவே வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விஜய் கண் முன் நிறுத்துகிறார். இதற்கு இடையில் விஜய் மற்றும் காவிரி கல்யாணம் ஆகும் பொழுது இருவருக்கும் ஒத்துப்போகாவிட்டாலும் ஒப்பந்தத்தின் படி ஒரு வருட கணவன் மனைவியாக வாழ்வதற்கு சம்மதித்திருந்தார்கள்.

ஆனால் அப்படி வாழ்ந்த சமயத்தில் இருவர்களுடைய மனசுல ஒருத்தரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி அவர்கள் காதல் கைகூடும் அந்த தருணத்தில் வெண்ணிலா நுழைந்ததால் விஜய் அவருடைய காதலை சொல்ல முடியாமல் பிரச்சனையை சமாளித்துக் கொண்டு வருகிறார். இதனால் இந்த நாடகம் தற்போது பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

விஜய் டிவியில் இந்த மாதிரி ஒரு ட்ராக் மகாநதி சீரியலில் வந்து கொண்டிருக்கிறது என்றால் இதே மாதிரி ஒரு டிராக் மற்றொரு சீரியலிலும் வரப்போகிறது. அதாவது எப்படி விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியோதோ, அதே மாதிரி நீ நான் காதல் என்ற சீரியலில் அபி மற்றும் ராகவ் ஜோடியும் மக்களின் ஃபேவரிட் ஜோடியாக தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இதுவரை அபியை புரிந்து கொள்ளாமல் நோகடித்து வந்த ராகவ், அபி மீது எந்த தவறும் இல்லை என்று உணர்ந்து கொண்டு அவருடைய காதலை சொல்ல தயாராகிவிட்டார். ஆனால் காதல் சொல்ல போகும் பொழுது முன்னாள் காதலித்த மது உள்ளே நுழைந்து விடுவார். ஏற்கனவே மதுவை ராகவ் உருகி உருகி காதலித்து இருக்கிறார் என்ற விஷயம் அபிக்கு தெரிந்ததால் ராகவ் மற்றும் மதுவை சேர்த்து வைக்க அபி முயற்சி எடுப்பார்.

இது என்ன ஒரே சேனலில் இரண்டு கதைகள் ஒன்றாக இருப்பது போல் தான் அட்டகாப்பி அடித்திருக்கிறார்கள். வேறு கதையே இல்லாமல் இந்த இரண்டு சீரியல்களிலும் கதைகளும் ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்த இரண்டு நாடகமே மக்களை கவர்ந்திருக்கிறது என்பதால் சேனல் தரப்பில் இருந்து இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுகிறார்கள்.

Trending News