
Jyothika: நடிகை ஜோதிகா பாலிவுட் உலகில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றி எந்த வயதிலும் எதுவும் சாத்தியம் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் சூர்யா ஆரம்பித்து வைத்த சிக்ஸ் பேக் ஸ்டைல் தான் இன்று வரை இளைஞர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.
அதே மாதிரி தன்னுடைய பெண் ரசிகைகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஜோதிகா உடல் எடையை குறைத்து இருக்கிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து வந்த ஜோதிகா தற்போது மூன்று மாத கால அளவில் 9 கிலோ எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
வெயிட் லாஸ் ரகசியம்!
மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி பகிர்ந்திருக்கிறார்.
ஜோதிகா பகிர்ந்திருக்கும் போஸ்டில் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட் ஆரம்பிக்க வேண்டும். சரிசமமான உணவு தான் டயட். இதை சரியாக பின்பற்றினாலே உடல் எடை கணிசமாக குறையும் என்று பகிர்ந்திருக்கிறார்.
நடிகைகள் பலரும் உடல் எடையை குறைக்க ஆபரேஷன் முறையை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் காலம் இது.
இப்படிப்பட்ட நேரத்தில் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு பற்றி ஜோதிகா மனம் திறந்து பேசி இருப்பது மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.