வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கெட்ட வார்த்தை பேசிய ஜோதிகா.. கடுப்பாகி சூர்யா குடும்பம் வைத்த பெரிய ஆப்பு

ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் படத்தில் நடிக்க கூடாது என சூர்யாவின் குடும்பத்தினர் கூறினார்கள். அதன் அடிப்படையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிக்காமல் இருந்தார்.

சமீபகாலமாக நாச்சியார் போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் கெட்ட வார்த்தையும் பேசினார். இதனை பார்த்து கடுப்பான சூர்யாவின் குடும்பத்தினர் ஜோதிகா இனிமேல் எந்த படங்களில் நடிக்க கூடாது என கூறியுள்ளார்.

அதனால்தான் சூர்யா தயாரிப்பில் ஒரு சில படங்கள் நடித்து வந்த ஜோதிகா தற்போது எந்த படத்தில் நடிப்பதில்லை. சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்க்கி படத்தில் முதலில் ஜோதிகா நடிப்பதாகவும் சூர்யா தயாரிப்பதாகவும் இருந்தது. ஆனால் ஜோதிகா நடிப்பது சூர்யா குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் ஜோதிகா நடிக்கவில்லை.

அதன்பிறகுதான் இந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது. இந்த படம் ஓடிடி-யில் வெளியாக இருந்தது. ஆனால் இன்று திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம் ராஜேந்திரன் இந்தப்படத்தில் சமூகத்தில் அவ்வபோது அரங்கேறி வரும் முக்கிய பிரச்சனையை தோலுரித்து காட்டியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு ஜோதிகா இதுபோன்ற புரட்சி மிகுந்த மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால், இந்தப் படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் சூர்யா குடும்பத்தால் இந்தப் படத்தில் ஜோதிகா நடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

சூர்யா, ஜோதிகாவிற்கு சப்போர்ட்டாக நின்றிருந்தால் கண்டிப்பாக இப்படத்தில் நடித்திருக்க முடியும். ஆனால் சூர்யாவோ குடும்பத்தினரை சொல்வதைக் கேட்டு அமைதியாக இருந்துள்ளார். இதனால் ஜோதிகா சற்று கோபத்தில் உள்ளார்.

Trending News