வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வாண்டடாக சிக்கிய ஜோதிகா.. சூர்யா மீது வன்மமா , உண்மையிலேயே இதான்பா பிரச்சனை

Jyotika: சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது நடிகை ஜோதிகாவுக்கு தான் சரியாக பொருந்தியிருக்கிறது. ஏற்கனவே நடிகர் சூர்யாவுக்கு ரசிகர்களிடையே மவுசு குறைய ஜோதிகா தான் காரணம் என ஒரு சாரார் ஏகத்துக்கும் அவரை வசை பாடி கொண்டிருக்கின்றனர்.

போதாத குறைக்கு அம்மணி இன்னும் நல்லா பேசுங்க என்று கண்டன்ட்டு கொடுத்து கொண்டிருக்கிறார். ஒரு படம் மக்களின் மனதோடு பொருந்தி போகவில்லை என்றால் அதன் மீதான விமர்சனம் கொஞ்சம் பலமாக தான் இருக்கும்.

உண்மையிலேயே இதான்பா பிரச்சனை

எத்தனையோ சிறப்பம்சத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீஸ் சமயத்தில் எப்படியான விமர்சனங்களை சந்தித்தது என்பது அனைவரும் அறிந்ததே. சூர்யா படத்தின் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம் என்று கேட்கிறார் ஜோதிகா.

சூரரை போற்று, ஜெய்பீம் போன்ற படங்களை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது அவ்வளவு சீக்கிரம் ஜோதிகாவுக்கு மறந்து போயிருக்க வாய்ப்பில்லை. சூர்யாவின் மனைவியாக இல்லாமல் சினிமா ரசிகையாக பேசுகிறேன் என்கிறார்.

அப்படியென்றால் தி கோட், இந்தியன் 2, வேட்டையன் போன்ற படங்களை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் போது ஜோதிகாவுக்குள் இருந்த சினிமா ரசிகை எங்கே போயிருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. விமர்சனங்கள் செய்பவர்கள் எல்லாம் சினிமாவுக்காக என்ன செய்தார்கள் என்று பேசுவதெல்லாம் ரொம்பவும் அபத்தமான ஒன்று.

நான் கடின உழைப்பை போட்டிருக்கிறேன், அதனால் நீ என் படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனம் வைக்க கூடாது என்பதெல்லாம் யாராலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் ஜோதிகாவால் ஏன் ஒரு நெகட்டிவ் விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என்பது தான் பெரிய ஆச்சரியம்.

இதே சூர்யா சூரரை போற்று படம் மூலம் தேசிய விருது வாங்க காரணமாக இருந்தது இப்போ கங்குவாவுக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கும் ரசிகர்கள் தான். இந்த ரசிகர்களால் தான் சூர்யாவை ஆஸ்கார் விருது கமிட்டி அழைப்பு விடுத்தது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

Trending News