Jyothika: நடிகை ஜோதிகா மீடியா முன்பு பேசிய விஷயத்தை அப்படியே மழுப்பி அந்த பல்டி அடித்து இருப்பது இப்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமா என்னவோ ஜோதிகாவை இரு கரம் கூப்பி வரவேற்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஜோதிகா தான் ஒரு சில வருடங்களாக தமிழ் சினிமா மீது பாராமுகமாக இருக்கிறார்.
போதாத குறைக்கு தமிழ் சினிமாவில் எனக்கு மரியாதை இல்லை, இயக்குனர்களுக்கு படம் எடுக்க தெரியவில்லை, ஹீரோக்கள் இதை தட்டிக் கேட்கவில்லை என மீடியாவுக்கு மீடியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அந்தர் பல்டி அடித்த ஜோ
அவருடைய டப்பா கார்டல் வெப் சீரிஸ் ரிலீசுக்கு முன்பு வரை இப்படித்தான் நிலைமை போய்க் கொண்டிருந்தது. திடீரென யாரு சொன்னா தமிழ் சினிமாவில் நல்ல படம் எடுக்கத் தெரியாது என்று என அப்படியே தோசையை திருப்பி போட்டு விட்டார்.
இயக்குனர் பாலச்சந்தர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய படங்களை எடுத்திருந்தார். இப்போது தான் அப்படிப்பட்ட படங்கள் வருவதில்லை என்று சொல்லி இருக்கிறார்.
மே மாதம் தன்னுடைய காதல் கணவர் சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நேரத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்துவிட்டார் போல.