வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தளபதி 68ல் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திய ஜோதிகா.. சாய்ஸை, சான்ஸாக மாற்றிய செல்ல ஹீரோயின்

Thalapathy 68 Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தின் அடுத்த கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆன கையோடு, விஜய் வரும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த படத்திற்கான கதை விவாதங்கள் முடிவடைந்ததோடு, நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தேர்வும் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 படத்தில் ஜெய் நடிக்க இருப்பதாக கடந்த மாதமே செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு டூயல் கேரக்டர் என்று தெரிய வந்திருக்கிறது.

Also Read:ரஜினி, விஜய்யை விட மிக மிக சொற்ப சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்ஸ்.. மம்மூட்டிக்கு கூட இவ்வளவுதானா?

பிகில் திரைப்படத்திற்கு பிறகு விஜய், மீண்டும் அப்பா- மகன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதில் அப்பா கேரக்டர் அரசியல்வாதியாகவும், மகன் கேரக்டர் ரா ஏஜென்ட் எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தளபதி 68ல் நடிகைகள் ஜோதிகா மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஏற்கனவே ஜோதிகாவை மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க அட்லி திட்டமிட்டு அது முடியாமல் போனது. தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். படத்தில் நடிப்பதற்கு சம்மதம் சொன்ன ஜோதிகா நவம்பரில் கால்ஷீட் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

Also Read:அஜித்துக்கு இருக்கும் ஒழுக்கம், விஜய்க்கு இல்லை.. பொறுப்பில்லாமல் நடித்த தளபதிக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்

படப்பிடிப்பு தொடங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஜோதிகா ஒரு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் ஜோதிகாவுக்கு தமிழ்மொழி மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பு கிடைத்து கொண்டிருப்பதால், சட்டென தன் சம்பளத்தை அதிகம் ஆக்கி இருக்கிறார். இதனால் வெங்கட் பிரபு இது வேலைக்கு ஆகாது என வேறு பிளான் போட்டுவிட்டார்.

தளபதி 68 ஹீரோயின் தேர்வில் சாய்சாக வைக்கப்பட்டிருந்தவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன். தற்போது ஜோதிகா சம்பள விஷயத்தில் கறார் காட்டியிருப்பதால் சாய்சிலிருந்த பிரியங்கா தற்போது ஹீரோயின் சான்ஸுக்கு முன்னேறி விட்டார். இப்போதைக்கு வெங்கட் பிரபுவின் லிஸ்டில் முதலில் இருப்பவர் இவர் தானாம்.

Also Read:ஒரு வழியா விஜய்க்கு கிடைத்த அப்பாயின்மென்ட்.. லாஸ் ஏஞ்சல்ஸில் இளைய தளபதி செய்யும் போக்கிரித்தனம்

Trending News