புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

பாலச்சந்தர் கண்டுபிடித்த மகா நடிகன்.. 80 வயதிலும் ஆச்சரியப்படுத்தும் ஒரே கலைஞன்

K.Balachandar: காமெடி, வில்லன் போன்ற கேரக்டர்கள் என்றால் சில நடிகர்கள் நம் நினைவுக்கு வருவார்கள். அப்படித்தான் குணச்சித்திர கேரக்டர் என்றாலே இந்த நடிகரை நினைக்காமல் இருக்க முடியாது.

47 வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் இந்த நடிகர் காமெடி மட்டும் அல்லாமல் வில்லன், அப்பா கேரக்டர் என அனைத்திலும் பொளந்து கட்டி விடுவார். பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான இவர் சிவாஜி, கமலுக்கும் நெருங்கிய நண்பர் ஆவார்.

தற்போது 80 வயதான நிலையிலும் இன்னும் அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4, விஷாலின் ரத்னம் படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.

80 வயதிலும் அசத்தும் டெல்லி கணேஷ்

அப்படிப்பட்ட நடிகர் வேறு யாரும் கிடையாது மகா கலைஞன் என போற்றப்படும் டெல்லி கணேஷ் தான். 1977ல் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் மூலம் இவர் நடிகரானார். அதற்கு முன்பு டெல்லியில் பல நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார். அதுவே இவருக்கு ஒரு அடையாளமாக இப்போது வரை இருக்கிறது. மேலும் சின்னத்திரையிலும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் மாரி, இலக்கியா சீரியலிலும் இவர் நடித்து வருகிறார். இப்படி ஆல் ரவுண்டராக இருக்கும் இவர் ரொம்பவே எளிமையானவர். சென்னையில் ஏழு கோடி மதிப்பில் இவருக்கு சொந்த வீடு இருக்கிறது. இவ்வாறு அமைதியாக வாழ்ந்து வரும் இவருக்கு ஹீரோ என்ற அங்கீகாரம் மட்டும் கிடைக்கவில்லை. இதற்கு பாலச்சந்தரும் ஒரு காரணம் என்கின்றனர்.

ஏனென்றால் டெல்லி கணேஷை அறிமுகப்படுத்தி அவர் பின்னாளில் அதே போன்ற கேரக்டரை தான் கொடுத்து வளர்த்து விட்டுள்ளார். அந்த வகையில்

மைக்கேல் மதன காமராஜன்
அவ்வை சண்முகி
அபூர்வ சகோதரர்கள்
சாமி

என இவரின் பல படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது.

மகா நடிகனாக இருக்கும் கமலின் நண்பர்

Trending News