திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

60 ரூபா டிக்கெட்டுக்கு 130 ஸ்னாக்ஸ் கட்டாயமா வாங்கணும்.. பகல் கொள்ளை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்த K.ராஜன்

K.Rajan: தயாரிப்பாளர் கே ராஜன் பொது மேடைகளில் பல விஷயங்கள் குறித்து பேசுவார். அது சில சமயம் சர்ச்சைகளை கிளப்பினாலும் பல கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும் படியாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் டிக்கெட் விலை குறித்து பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதாவது ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதன் டிக்கெட் விலை தாறுமாறாக எகிறிவிடும். இதை கண்டித்து பலரும் கொந்தளித்ததை அடுத்து தற்போது டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மால் போன்ற இடங்களில் இருக்கும் தியேட்டர்களில் 120, 100, 80 ஆகியவை அடிப்படையில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.

Also read: பரதேசி, எச்ச என மேடையில் படுகேவலமாக மல்லு கட்டிய K. ராஜன்.. பயில்வானுடன் பப்ளிசிட்டிக்காக நடந்த கூத்து

சில இடங்களில் 60 ரூபாய்க்கு கூட டிக்கெட் கிடைக்கின்றன. இது சாமானிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனென்றால் கூலி வேலை செய்து அன்றாடம் சம்பாதிப்பவர்கள் எப்போதாவது இது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் அதை கெடுக்கும் வகையில் பல தியேட்டர்களில் படம் பார்க்க வருபவர்களிடம் ஸ்னாக்ஸ் வாங்குவதற்கு அதிக பணத்தை வசூலிக்கின்றனர். இப்போதெல்லாம் தியேட்டர்களில் வீட்டிலிருந்து எந்த உணவுப் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்பது கட்டாயமாகப்பட்டிருக்கிறது. அதனால் தியேட்டர்களில் இருக்கும் ஸ்னாக்ஸ் வகைகளை மட்டுமே வாங்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

Also read: படம் முழுக்க ராஜன் கேரக்டர் தான் இருக்கு.. வெற்றிமாறனுக்கு தனுஷ் கொடுத்த நெருக்கடி

அப்படி பார்த்தால் பாப்கார்ன், கூல்ட்ரிங்ஸ், பப்ஸ் போன்றவைகள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதிலும் சென்னையில் இருக்கும் பிரபல தியேட்டர் ஒன்றில் 60 ரூபாய் டிக்கெட் வாங்கினால் 130 ரூபாய்க்கு ஸ்னாக்ஸ் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இது பற்றி கூறியிருக்கும் கே ராஜன் சாமானிய மக்கள் குடும்பத்தோடு ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2000 ரூபாய் இல்லாமல் போக முடியாது.

இந்த கொடுமை எல்லாம் தமிழக அரசு சரி செய்ய வேண்டும். அப்போதுதான் சாமானிய மக்கள் இது போன்ற இடங்களுக்கு வர முடியும். இல்லை என்றால் மால் போன்ற இடங்களில் படம் பார்ப்பது என்பது அவர்களுக்கு எட்டா கனியாகவே மாறிவிடும். இப்படி ஒரு பகல் கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் கே. ராஜனை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also read: ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்

- Advertisement -spot_img

Trending News