வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் கே எஸ் ரவிக்குமார்.. நியாயமே இல்லாமல் வடிவேலு கொடுக்கும் அலப்பறை

வடிவேலு தற்போது ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அவர் ஹீரோவாகவும், லாரன்ஸ், உதயநிதி போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார் வடிவேலுவை தன் திரைப்படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார். லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் வடிவேலுவுக்கு ஒரு முக்கிய கேரக்டரும் இருக்கிறது. ஏற்கனவே லாரன்ஸ், வடிவேலு இருவரும் இணைந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Also read:நடிகர்களை காமெடியில் ஓரங்கட்டிய வடிவேலுவின் 6 படங்கள்.. இப்பவரைக்கும் கொண்டாடப்படும் கைப்புள்ள கதாபாத்திரம்

அந்த வகையில் வடிவேலுவும் கே எஸ் ரவிக்குமார் திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து 20 நாட்கள் கால்ஷுட் தரவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அதில் தான் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வடிவேலு தற்போது எக்கச்சக்கமாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

அதாவது அவர் ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம். இதுதான் இப்போது கே.எஸ். ரவிக்குமாருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஏனென்றால் ஒரு நாளைக்கு 25 லட்சம் என்றால் 20 நாட்களுக்கு கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும்.

Also read:KS ரவிக்குமார் இரண்டாம் பாகம் எடுக்க அடம்பிடிக்கும் 5 படங்கள்.. பெரிய பெரிய தலைகளுக்கு கொடுத்த மெகா ஹிட்

இவருக்கே 5 கோடி என்றால் ஹீரோ, ஹீரோயின் உட்பட மற்றவர்களுக்கெல்லாம் எப்படி சம்பளம் கொடுப்பது என்று கே எஸ் ரவிக்குமார் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாராம். கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல் வடிவேலு கொடுக்கும் இந்த அலப்பறையால் பட குழு தற்போது செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ள வடிவேலு அடுத்ததாக ஒரு திரைப்படத்திலும் ஹீரோவாக கமிட்டாகி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதால் தான் அவர் தன்னுடைய சம்பளத்தை இந்த அளவுக்கு இரக்கமே இல்லாமல் உயர்த்தி உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read:ரீ-என்ட்ரி கைகொடுக்குமா.? கவர்ச்சி மூலம் வாய்ப்பை கெட்டியாக பிடித்த லாரன்ஸ் பட நடிகை

Trending News