புதன்கிழமை, ஜனவரி 8, 2025

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களை கவர்ந்ததா? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படம் வெளிவந்துள்ளது.

இரண்டு பெரிய ஹீரோயின்கள் என்பதால் இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் படத்தின் டிரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. இதனால் படத்தை தற்போது ஆர்வத்துடன் பார்த்து வரும் ரசிகர்கள் படம் குறித்து பல கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

krk
krk

அதில் சிலர் நான்கு ஆண்டுகளாக இந்த படத்தை தான் விக்னேஷ் சிவன் உருட்டிக்கொண்டு இருந்தாரா என்றும், சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றுமில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் காமெடி காட்சிகள் ஓரளவுக்கு நன்றாக இருப்பதாகவும், மற்றபடி பல காட்சிகள் செயற்கைத்தனமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

krk
krk

சமீபகாலமாக தமிழில் வெளிவரும் பல திரைப்படங்கள் ரசிகர்களை மண்டை காய வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தத் திரைப்படமும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளதாகவும் சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி பல நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்திருந்தாலும் ஒரு சிலர் படம் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர்.

krk
krk

கதை அந்த அளவுக்கு ரசிகர்களை கவரா விட்டாலும் ராம்போ, கண்மணி, கதீஜா கதாபாத்திரங்கள் படத்திற்கு பிளஸ்சாக அமைந்துள்ளது. மேலும் அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படக்குழுவினர் படம் குறித்து பெரிதாக எந்த பிரமோஷனும் செய்யாத நிலையில் தற்போது ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

krk
krk

அதனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் ஓரளவிற்கு கல்லா கட்டும் என்று திரையுலகில் கூறப்பட்டு வருகிறது. மேலும் சமந்தாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த படம் வெளிவந்து இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News