திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

நயன்தாராவை தாக்கிய விஜய் சேதுபதியின் ராசி.. காத்துவாக்குல 2 காதல் பட தோல்விக்கு இத்தனை காரணமா.?

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் ஏதோ சில படங்கள் தான் ரசிகர்களை கவர தவறி விடும். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் வெளிவரும் பல படங்கள் ரசிகர்களிடம் எதிர்மறை விமர்சனங்களை அதிகமாக பெற்று வருகிறது.

அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்திருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்பில் இப்படம் நேற்று வெளியானது. ஆனால் படக்குழுவுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

அதற்கு முக்கிய காரணம் படத்தை புரமோஷன் செய்யாதது தான் என்கின்றனர் ஒரு சிலர். மேலும் விஜய் சேதுபதி மற்றும் இரண்டு பெரிய ஹீரோயின்கள் என்ற ஆர்வத்தால் படத்தைப் பார்த்த சில ரசிகர்களும் படத்தைப் பற்றி தற்போது எதிர்மறை கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.

அதிலும் விஜய் சேதுபதிக்காக படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஏனென்றால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பிளேபாய் கேரக்டரில் நடித்துள்ளார். அந்த கேரக்டர் அவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்பதுதான் ரசிகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அவரை வைத்து இந்தப் படத்தை இயக்கியது தான் முதல் தப்பு என்கின்றனர்.

மேலும் சமீபகாலமாக விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து அவரையே பார்க்கும் பலருக்கும் சலிப்பு தட்ட தான் செய்யும். அதுமட்டுமல்லாமல் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் எதார்த்தமாக இல்லாமல் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கின்றதாம்.

மக்கள் செல்வன் என்ற பெயரை வைத்துக்கொண்டு கள்ளக்காதல் போன்ற கதைகளில் நடிக்கலாமா என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதனால் மக்கள் செல்வன் என்ற பெயரை வைத்து மக்களை நன்றாக ஏமாற்றி விட்டார் என்று விஜய் சேதுபதிக்கு எதிராக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் அல்லது சிம்பு நடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதியின் படங்கள் நினைத்த அளவுக்கு வெற்றி பெற இந்த சூழ்நிலையில் விக்னேஸ்வரனின் கூட்டணியும் கைகொடுக்கவில்லை. இதனால் பெரும் கவலையில் உள்ளாராம் விஜய் சேதுபதி. விக்னேஷ் சிவனும் நயன்தாராவை கம்மியாக காட்டிவிட்டு சமந்தாவின் நடிப்பை தூக்கலாக காட்டி விட்டதாக விமர்சனங்கள் வருகின்றன.

ரசிகர்கள் இவ்வளவு தூரம் புலம்பும் அளவிற்கு வைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்தப் படத்தைதான் நான்கு வருடமாக உருட்டி கொண்டிருந்தீர்களா என்று அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதெல்லாம் தெரிந்துதான் லேடி சூப்பர் ஸ்டார் படத்தை புரமோஷன் செய்யவில்லையோ என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News