புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காந்தாராவை போல மிரட்டியுள்ள ஸ்ரேயா, உபேந்திராவின் கப்ஜா.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

கன்னட மொழியில் வெளியாகும் சில படங்கள் அனைத்து மொழி ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கே ஜி எஃப், கே ஜி எஃப் 2 மற்றும் காந்தாரா படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

மேலும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று கன்னட மொழியில் கப்ஜா என்ற படம் வெளியாகி உள்ளது. ஆர் சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்துள்ளார்.

kabzaa

Also Read : காசுக்காக நம்ம ஹீரோக்களை அவமானப்படுத்தும் இயக்குனர்கள்.. கேஜிஎஃப், காந்தாராவை பார்த்து கத்துக்கோங்க

மேலும் சிவராஜ் குமார், கிச்சா சுதீப் போன்றோர் கேமியா தோற்றத்தில் நடித்திருந்தனர். ஸ்ரேயா கப்ஜா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்டுள்ளது. இப்படத்தில் காந்தாரா மற்றும் கேஜிஎப் படங்களை போல நிறைய சுவாரசியமான விஷயங்கள் உள்ளதாம்.

kabzaa-review

தற்போது சிவராஜ் குமார் ரஜினியின் ஜெயிலர் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருவதால் தமிழ் ரசிகர்கள் இவருக்காக கப்ஜா படத்தை பார்த்து உள்ளனர். மேலும் கிச்சா பத்து நிமிடம் மட்டுமே படத்தில் வந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்ததாக கூறியுள்ளனர்.

kabzaa

Also Read : காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

ஸ்ரேயாவின் நடிப்பு அபாரமாக இருந்தது. கப்ஜா படத்தில் மியூசிக் நன்றாக இருந்ததாகவும் வி எஃப் எக்ஸ் வேலைகள் மிகவும் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் சாதாரணமான கேங்ஸ்டர் கதை களத்தை கொண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.

kabzaa

கப்சா படத்தில் ஸ்கிரிப்ட் வேலைகள், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை சொதப்பி உள்ளனர். அதில் மட்டும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். காந்தாரா அளவுக்கு இந்த படம் இல்லை என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Also Read : 100 நாட்கள் ஓடி உண்மையான வெற்றியை ருசித்த நான்கு படங்கள்.. காந்தாரா ரிஷப் ஷெட்டி சொன்ன குட் நியூஸ்

Trending News