புதன்கிழமை, ஜனவரி 8, 2025

விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் எப்படி இருக்கு.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களின் மூலம் பிரபலமான மணிகண்டன் தற்போது கடைசி விவசாயி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு, நல்லாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் முதியவர் அனுபவிக்கும் பிரச்சனைகளும், அதனால் உண்டாகும் வலியை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் இப்படம். அதில் விவசாயியாக நடித்துள்ள நல்லாண்டி என்ற முதியவர் அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்.

kadaisivivasay
kadaisivivasay

படத்தைப் பார்க்கும் பொழுது அவர் நடித்தது போன்றே தெரியவில்லை அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறது அவருடைய நடிப்பு. கௌரவத் தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதியும் நடிப்பில் வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார்.

kadaisivivasay
kadaisivivasay

மேலும் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும் தியேட்டரையே அதிர வைக்கும் அளவுக்கு இருக்கிறது. படம் முடிந்த பிறகும் அதன் தாக்கம் அனைவருக்குள்ளும் எழுகிறது. இப்படி ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குனர் மணிகண்டனுக்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

kadaisi-vivasay
kadaisi-vivasay

தற்போது கடைசி விவசாயி திரைப்படத்தைப் பற்றி ரசிகர்கள் அனைவரும் பாசிட்டிவ் கருத்துகளை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலைமை என்ன என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

kadaisivivasayi-movie-review
kadaisivivasayi-movie-review

மேலும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்றும் கருத்துகளை குறிப்பிடுகின்றனர். பல சமூக அக்கறை கொண்ட கதைகளில் நடித்து பிரபலமான விஜய்சேதுபதிக்கு இந்தப் படம் அவரது சினிமா வாழ்வில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

kadaisivivasayi-movie-review-1
kadaisivivasayi-movie-review-1

Trending News