Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், இந்த மாதிரி ஒரு சக்தி தான் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப சக்தி அவருடைய நடிப்பை முழுமையாக கொடுத்து வருகிறார். அந்த வகையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று சக்தி முடிவு எடுத்துவிட்டார். அதனால் இனி ஜனனியின் எடுப்படியாகவும் அண்ணிகளுக்கு செம்பு தூக்கியாகவும் இருக்கக் கூடாது என்று யோசித்து அனைவரையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
அதில் முதலாவதாக ஜனனிடம் இனி எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லவோ செய்யவோ விடு. எல்லாத்துக்கும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதே என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் ஈஸ்வரிடம் தர்ஷன் எப்படிப்பட்டவன் என்பதை தெரிந்ததும் அந்த பொண்ணு பார்கவி, தர்ஷனை வேண்டாம் என்று போன பிறகும் ஏன் உங்களுடைய சுயநலத்திற்காக அந்த குடும்பத்தை பலியாடாக ஆக்குறிங்க என்று கேட்கிறார்.
இதில் சக்தி கேட்பதும் சரிதான் என்பதற்கு ஏற்ப தர்ஷன் உடைய கேரக்டர் மோசமாக இருக்கும் பட்சத்தில் அப்படிப்பட்ட தர்ஷனுக்காக ஏன் அந்த பொண்ணு கஷ்டப்பட்டு தர்ஷனை கல்யாணம் பண்ண வேண்டும். அப்படி கல்யாணம் பண்ணாலும் அந்த பொண்ணு சந்தோஷமாக இருக்க முடியுமா? அல்லது இருக்க தான் எல்லோரும் விட்டுவிடுவார்களா? இதற்கு பேசாமல் அந்த பொண்ணு இஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்து போகட்டுமே என்று கேட்கிறார்.
இது மட்டும் இல்லாமல் குணசேகரனையும் சந்தித்து பேசுகிறார், குணசேகரன் எப்படியாவது வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று சக்தி முயற்சி எடுக்கிறார். அப்படி குணசேகரன் வந்துவிட்டால் தர்ஷன் கல்யாணமும் நின்றுவிடும் சக்தி பற்றிய உண்மையும் புரிந்துவிடும் என்பதற்காக ஒரே கல்லில் இரண்டு மாங்காவுக்கு குறி வைக்கும் விதமாக சக்தி புதுசாக மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்துகிறார்.
இதற்கிடையில் நந்தினி அப்பா, கதிரை சந்தித்து பேசுகிறார். அப்பொழுது என்னுடைய அண்ணன் சொத்து அனைத்தையும் தர்ஷனுக்கு எழுதி வைப்பதாக சொல்லிட்டார் என்ற விஷயத்தை சொல்லுகிறார். உடனே நந்தினி அப்பா, அது எதுவும் நடக்காத படி உங்க அண்ணனுக்கு ஏழரை இழுத்து விட்டு அதில் அவர் சிக்கி தவித்து மறுபடியும் ஜெயிலுக்குள் போகும்படி நான் பார்த்துக் கொள்கிறேன்.
நீங்கள் சொத்தை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அந்த வகையில் குணசேகரனுக்கே ஸ்கெட்ச் போடும் அளவிற்கு மாமனார் உடன் சேர்ந்து கதிர் சதி வேலைகளை பார்ப்பதற்கு துணிந்து விட்டார். தற்போது குணசேகரனும் காசு பணம் மட்டும் இருந்தால் போதாது சந்தோஷமும் வேண்டும் என்று புத்திக்கு எட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் என்பதற்கு ஏற்ப, சொத்தையும் கதிர் பெயரில் எழுதி ஏமாந்து விட்டார். அறிவுக்கரசியும் நம்பி ஏமாறப்போகிறார்.