செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பாண்டியன் கண்ணில் மண்ணைத் தூவ கதிர் போட்ட பிளான்.. செந்தில் கொடுத்த ஐடியாவால் பலியாடாக சிக்க போகும் அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் வாரிசுகள் மூன்று பேரும் சேர்ந்து அம்மாவின் கவலையையும், ராஜியின் கஷ்டத்தையும் போக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ப்ளான் பண்ணுகிறார்கள். அந்த வகையில் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அம்மாவையும் ராஜியையும் ஆஸ்பத்திரிக்கு கூட்டி அப்பத்தாவை காட்டிட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்து விடக்கூடாது. அவர்கள் அங்கே வராமல் தடுக்க வேண்டும் அதற்கு என்ன பிளான் என்று கதிர் கேட்கிறார். உடனே செந்தில், அவர்களுக்கு தற்போது குமரவேலுவின் கல்யாணத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது. அதனால் குமரவேலுவை மாப்பிள்ளை பார்ப்பதற்காக பெண் வீட்டார்கள் வருகிறார்கள் என்று சொல்லி வீட்டிலேயே உட்கார வைத்து விட வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார்.

இதை கேட்டதும் கதிர் சூப்பர் ஐடியா அப்படியே பண்ணிவிடலாம் என சொல்கிறார். உடனே பழனிச்சாமி, எங்க அண்ணன் வீட்டில் இப்போ போய் சொல்லப்போகிறது யார் என்று கேட்கிறார். அதற்கு செந்தில் மற்றும் கதிர் சேர்ந்து நீங்கள் தான் போய் பேச வேண்டும் என்று பழனிச்சாமியை அனுப்பி வைக்கிறார். அதன்படி பழனிச்சாமி, அண்ணன்களிடம் போயி எனக்கு தெரிந்த ஒரு பெண் குடும்பத்தினர் குமரவேலுவை மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள்.

அவர்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். அதனால் நிச்சயம் இந்த சம்பந்தம் நடந்து விடும் என்று முத்துவேல் மற்றும் சக்திவேலுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசுகிறார். உடனே இவர் சொல்வதை நம்பி அவர்கள் சரி வரட்டும், நம் வீட்டிலேயே இருந்து அவங்களுக்காக காத்துக் கொண்டிருப்போம் என்று முடிவெடுத்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் பாண்டியனும் வீட்டிற்கு வந்து அம்மா எங்கே என்று கேட்டு விடக்கூடாது என்பதற்காக சரவணன் மட்டும் செந்திலை கடைக்கு அனுப்பி வைத்து பாண்டியன் கண்ணில் மண்ணைத் தூவ பிளான் பண்ணி விட்டார்.

ஆக மொத்தத்தில் போட்ட பிளான் படி எல்லாம் கச்சிதமாக நடந்து முடிந்து விட்டது. இதுதான் சான்ஸ் என்று கதிரும், ராஜி மற்றும் கோமதியை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் செண்டிமெண்டில் உருகி உருகி அனைவரும் மொத்தமாக பாச போராட்டத்தை நடத்தி விட்டார்கள். ஆனால் ராஜியின் அம்மா மட்டும் கோபத்துடன் இருப்பதால் ராஜிடம் எதுவும் பேசவில்லை.

உடனே ராஜி, அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக பேசு என்று கெஞ்சுகிறார். ஆனால் எந்த ஒரு விஷயம் இப்பொழுது தெரியவில்லை என்றாலும் எப்படியும் பாண்டியன் மற்றும் சக்திவேல் முத்துவேலுக்கு தெரிந்துவிடும். இதன் பிறகுதான் பூகம்பமே வெடிக்கும் என்பதற்கு ஏற்ப சக்திவேல் பிரச்சனை பண்ண போகிறார். அதிலும் தன் மகனின் கல்யாண விஷயத்தில் ஏமாற்றி பொய் சொல்லி விட்டார்கள் என்ற கோபத்தில் ஒட்டுமொத்தமாக குமரவேலுவை வைத்து அரசி கழுத்தில் தாலி கட்ட சொல்லி பாண்டியனுக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்.

Trending News