வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆபத்தை விலைக்கு வாங்கும் காஜல் அகர்வால்.. ஓஹோ! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சங்கதி இருக்கா

தமிழ் சினிமாவில் நான் மகான் அல்ல படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர் துப்பாக்கி, ஜில்லா, பாயும் புலி, மாற்றான் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

காஜல் அகர்வால் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நீண்டநாள் காதலரும் தொழிலதிபரும் ஆன கௌதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கொண்டிருந்தார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். பிறகு காஜல் கர்ப்பம் ஆனதால் இந்தியன் 2 படத்திலிருந்து விலகிவிட்டார். அதேபோல் காஜல் அகர்வால் சில படங்களில் ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார்.

சமீபத்தில் காஜலின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கர்ப்பமாக உள்ள நிலையில் பலுதூக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்.

kajal-aggarwal
kajal-aggarwal

காஜல் அகர்வால் சுக பிரசவத்திற்காக இது போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார் போல. குழந்தை பிறந்த உடன் காஜல் அகர்வால் மீண்டும் படங்களில் நடிக்கிறாரா, இல்லை குழந்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துவாரா என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது காஜல் அகர்வால் உடற்பயிற்சி செய்யும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.

Trending News