ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கலைஞர், கேப்டன் ஆன்மா சும்மாவே விடாது.. கிழிந்த விஷாலின் முகமூடி

Actor Vishal: என்னதான் சினிமாவில் ஹீரோ வேஷம் கட்டினாலும் நிஜ வாழ்வில் வெகு சிலர் மட்டும்தான் ஹீரோவாக ஜெயிக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த். ஆனால் அவருடைய மறைவில் பல ஹீரோக்களின் முகமூடி கழண்டது.

அதில் முக்கியமானவர் விஷால் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற பல நடிகர்களும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் விஷால் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து தான் வந்தார்.

வந்ததும் ஓவர் பர்பாமன்ஸை போட்டு கண்ணீர் விட்டதோடு அன்னதானம் போட்டு சில வாக்குறுதிகளையும் அள்ளி வீசினார். ஆனால் அதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. அதை போல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் இவர் கலந்து கொள்ளாததும் பேசு பொருளாகி இருக்கிறது.

Also read: கேப்டன் 80% சதவீத படங்களில் விட்டுக் கொடுக்காத ஒரே நடிகர்.. யாருக்கும் தெரியாத விஜயகாந்தின் மறுபக்கம்

அதனால் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் இனிமேல் எக்காரணம் கொண்டும் முதல்வரை சந்திக்க முடியாத சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளார். இவர் மட்டுமல்ல நடிகர் சங்கம் தொடர்பாக யாரும் எந்த உதவியும் முதல்வரிடம் இருந்து இனி எதிர்பார்க்க முடியாது.

மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டினால் தான் திருமணம் என்று வருடக்கணக்காக விஷால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் சுற்றுவது போல் பிராங்க் வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சனத்திற்கும் ஆளானார்.

இப்படி விஷால் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. அவரை கலைஞர், கேப்டன் ஆத்மா மன்னிக்கவே மன்னிக்காது என பயில்வான் ரங்கநாதன் ஆவேசத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதன் மூலம் விஷாலின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுள்ளது.

Also read: கேப்டன் வாரிசுக்கு நான் இருக்கேன்.. விஜய், சூர்யா செய்யாததை செய்யத் துணிந்த மாஸ்டர்

Trending News