ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குளிர் ஜுரத்தை சுட்டெரித்த சூரியன்.. மாஸ் ஹீரோவை கதிகலங்க செய்த கலைஞர்

Kalaignar Karunanidhi: இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களை கண்டாலே தெரித்து ஓடும் அளவுக்கு தான் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் கருணாநிதி பத்திரிக்கையாளர்கள் எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும் ஒரு கணம் கூட யோசிக்காமல் எரிச்சல் ஊட்டும் கேள்விக்கும் நகைச்சுவையுடன் பதிலளித்து விடுவார்.

இவ்வாறு கலைஞரைப் பற்றி பல பிரபலங்கள் பேசும் போது அவருடைய நகைச்சுவை தன்மையை பற்றி தான் அதிகம் நினைவு கூர்ந்து சொல்வார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் கலைஞர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில் அந்த காலத்தில் கலைஞர் உடன் தான் பிரிவியூ ஷோ நடிகர்கள் பார்க்க வேண்டும். அதுவும் அன்று தேர்தல் நடந்ததால் அப்போது ஹீரோ ஒருவர்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து விட்டதாக பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக கூறிவிட்டார்.

Also Read : விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி

இந்தச் செய்தி அப்போது வைரலாக பரவி விட்டது. இதை அடுத்து அன்று மாலை கலைஞருடன் அந்த ஹீரோ பிரிவியூ ஷோ பார்க்க வேண்டும். எப்படி அவரை சந்திப்பது என்ற பயத்தில் தனக்கு குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார். ஆனால் கலைஞர் தியேட்டரில் ஹீரோவுக்காக காத்திருந்ததால் வேறு வழியில்லாமல் அவரும் படத்தைப் பார்க்க சென்று விட்டார்.

அப்போது உடனே கலைஞர் ஹீரோவை பார்த்து, காய்ச்சல்னு சொன்னீங்களே வந்து சூரியன் பக்கத்துல உட்காருங்க என்றாராம். அந்த ஹீரோ வேற யாருமில்லை நான் தான் என்று ரஜினி கலைஞர் நூற்றாண்டு மேடையில் முன்பு நடந்த விஷயத்தை நினைவு கூர்ந்து கூறினார். இவ்வாறு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி தன்னுடைய நகைச்சுவை பேச்சால் குளிர் ஜுரத்தையே சூரியனாக சுட்டு எரித்திருக்கிறார்.

Also Read : நட்புக்குள் ஏற்பட்ட பிளவு.. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு டாட்டா போட்ட விஷால்

Trending News