ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரஜினி மனதில் இருந்த தமன்னாவை தூக்கி எறிய செய்த கலாநிதி.. ஷூட்டிங்கில் ஒயிட் பியூட்டி செய்த மட்டமான வேலை

Rajinikanth-Tamannah: ரஜினி நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் படம் நாளுக்கு நாள், வசூல் வேட்டையில் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஓரளவுக்கு வெற்றியை எதிர்பார்த்த அவர்களுக்கு, மொத்தமாய் பெத்த லாபத்தை வாரி கொடுத்து விட்டது இந்த படம். இதனால் சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், கலாநிதி மாறன் சொகுசு கார்களை அடுத்தடுத்து ஒவ்வொருவருக்காக பரிசளித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி, ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதை தாண்டி, அந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவானது, காவாலா பாடல் ரிலீஸ் ஆன பின்பு தான். உண்மையை சொல்லப் போனால் இந்த படத்தை எல்லோரிடமும் கொண்டு சென்றது இந்த பாட்டு தான். அதிலும் தமிழ் சினிமாவில் பல வருடம் கழித்து தமன்னாவை பார்த்த ரசிகர்கள் மொத்தமாக வாயை பிளந்து விட்டார்கள்.

Also Read:635 கோடிக்கு காரணமான 2 பேர்.. ரஜினியை ஓரங்கட்டி காஸ்ட்லி கிப்ட் கொடுத்த கலாநிதி மாறன்

தமிழில் வத்தலும் தொத்தலுமான உடலமைப்போடு நடித்துக் கொண்டிருந்த தமன்னா, திடீரென இந்த பாடலில் கொழுக் மொழுக்கென்று படு கிளாமராக ஆடியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் ரீச்சுக்கு இந்த பாடல் தான் முக்கிய காரணம். ரஜினி, நெல்சன், அனிருத் தொடர்ந்து கலாநிதி மாறன் தமன்னாவுக்கும் ஏதாவது பரிசு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்குதான் மொத்தமாய் கோட்டை விட்டிருக்கிறார் மில்க் பியூட்டி தமன்னா. பாடலின் சூட்டிங் சமயத்தில் பயங்கர ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார். சரியாக ஷூட்டிங் வராமல் பட குழுவை சுத்தலில் விட்டிருக்கிறார். அந்த நேரத்தில் நிறைய இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், கால்ஷீட் சிக்கலில் ஜெயிலர் படத்தை மொத்தமாய் டீலில் விட்டு விட்டாராம்.

Also Read:எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

படக்குழு பல நாட்களாக தமன்னாவுக்காக காத்து கிடந்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினி கூட சொல்லியிருந்தார். இதுதான் கலாநிதி மாறன் டென்ஷன் ஆனதற்கு முழு காரணம். இதனால் தான் படத்தின் வெற்றிக்கு பெரிய காரணமாய் இருந்தும், மில்க் பியூட்டி ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்.

ஒருவேளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறங்கி வந்து படத்தின் வெற்றியின் பெரும் பங்களிப்பு கொடுத்த அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம் என்று நினைத்தால் கூட, கலாநிதி மாறன் அதற்கு விடமாட்டார் என்பது போல் தெரிகிறது. நல்ல ரீச் கொடுத்தும், நடவடிக்கைகள் சரியில்லாததால் அடுத்தடுத்த வாய்ப்பையும் இழந்து விட்டார் தமன்னா.

Also Read:விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

Trending News