தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். தற்போது அதை கல்பாத்தி அகோரம் திறம்பட நடத்தி வருகிறார். இந்த கம்பெனியின் தயாரிப்பில் திருட்டுப்பயலே என்ற திரைப்படம் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாற்றான், தனி ஒருவன், பிகில் போன்ற திரைப்படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தயாரிப்பு மட்டுமின்றி திரைப்படங்களை விநியோகமும் செய்து வருகிறது அந்த வகையில் மைனா, கவன், தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடைசியாக கல்பாத்தி அகோரம் பிகில் திரைப்படத்தை தயாரித்து இருந்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களையும் கல்பாத்தி அகோரம் தயாரிக்கவில்லை.
சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பது மற்றும் பட விநியோகம் போன்ற வேலைகளை மட்டுமே அவர் செய்து வந்தார். தற்போது அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பான் இந்தியா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கெத்தாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகர் மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்டரி. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகிக்கும் தமிழ்நாட்டு அனைத்து உரிமைகளையும் கல்பாத்தி அகோரம் வாங்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.
பயோகிராஃபிகல் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இப்படம் மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.