Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனாவுக்கும் வேலில போற ஓணானை தூக்கி வேட்டிக்குள்ள விடுவதே வேலையா போச்சு. இவர்களுக்கே அந்த குடும்பத்தில் மரியாதையும் மதிப்பும் இல்லாமல் பிழைத்து வருகிறார்கள். இதுல பாவம் அந்த கிரிஷையும் கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்தப் போகிறார்கள். அந்த வகையில் முத்து மீனாவும் கிரிஷை தத்தெடுப்பதற்கு தயாராகி விட்டார்கள்.
இந்த விஷயத்தை வீட்டில் ஆரம்பிக்கும் பொழுது க்ரிஷ் இன் நிலைமையும் அவங்க அம்மா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு இந்த பையனை தனியாக விட்டு விட்டார் என்பதையும் சொல்கிறார்கள். இதை கேட்டதும் மனோஜ் எந்த கேனையன் மாட்டினானோ பாவம் என்று சொல்லி, நீதான் அந்தக் கேனையன் என்று தெரியாத அளவிற்கு இருக்கிறார்.
பிரச்சனையில் மாட்டிக்கொள்ள போகும் ரோகிணி
இதனை தொடர்ந்து கிரிஷை நாங்கள் தத்தெடுக்க போகிறோம் என்று முத்து மீனாவும் சொல்கிறார்கள். இதை கேட்டதும் விஜயா வானத்துக்கும் பூமிக்கும் குதித்து கிரிஷை தத்தெடுக்கக்கூடாது என்பதற்காக பேசுகிறார். அப்பொழுது இதை அனைத்தையும் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் ரோகிணிக்கு மிகப்பெரிய சங்கடத்தையும் அவமானத்தையும் கொடுக்கிறது.
உடனே முத்து, நாங்கள் யாரும் உங்களிடம் பெர்மிஷன் கேட்கவில்லை, முடிவு பண்ணி விட்டோம். கிரிஷை தத்தெடுத்து இந்த வீட்டில் எங்களுடன் வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொல்கிறார். அதற்கு விஜயா, இது என்ன ஆசிரமம்மா எல்லாரையும் தத்தெடுத்து வளர்ப்பதற்கு என்று சொல்கிறார். முத்து நாங்கள் தத்தெடுத்து வளர்க்க தான் போறோம் என்று பிடிவாதமாக சொல்கிறார்.
அதற்கு விஜயா தத்தெடுத்து வளர்க்கணும் என்றால் வெளியிலே எங்கேயாவது கூட்டிட்டு போய் வளர்த்துக்கோ என்று சொல்கிறார். ஏன் வீட்டுக்குள் யாரையும் கூட்டிட்டு வரக்கூடாது என்று பிடிவாதமாக பேசுகிறார். அந்தப் பையனுடைய அம்மாவை அவன் வேண்டாம் என்று தூக்கி போட்டு போயிட்டாள். பெத்தவளுக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு எங்க வந்துச்சு என்று கடுமையாக பேசுகிறார்.
உடனே ரோகிணி வீட்டிற்குள் நுழைந்த பொழுது, விஜயா வா ரோகிணி என்ற சொல்லி ஒரு கட்டுப்போட்ட பையன் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தானா, அவனை இரண்டு பேரும் தத்தெடுத்து வளர்க்க போறதாக சொல்கிறார்கள் என்று விஜயா சொல்கிறார். அதற்கு முத்து அவனுடைய பாட்டி சம்மதம் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் தத்து எடுக்கப் போகிறோம் என்று கூறிவிட்டார்.
ஆனால் முத்து மீனாவிற்கு அந்த வீட்டில் தனியாக ரூம் இல்லாமல் மொட்டை மாடியிலும், வெளியிலும் தூங்கிக் கொள்கிறார்கள். இதில் கிரிஷை வேற கூட்டிட்டு வர போகிறார்கள். ஆனால் ரோகிணி, நிச்சயம் இதற்கு சம்மதம் கொடுப்பார். ஏனென்றால் க்ரிஷ் தினந்தோறும் அங்கே தனியாக இருந்து கஷ்டப்படுவதற்கு நம் கண் முன்னாடியே தினமும் பார்த்து வந்தால் நன்றாக இருக்கும்.
அத்துடன் நம் பையனும் நன்றாக வாழ்வான் என்று அம்மாவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லி முத்து கேட்டால் ஓகே என சொல்லிவிடு என சொல்லப் போகிறார். ஆனால் இதனால் வரக்கூடிய பிரச்சினை என்பதை ரோகினி யோசிக்காமல் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்ள போகிறார். கிரிஷ் வந்துவிட்டால், ரோகிணி ஒவ்வொரு நிமிடமும் சங்கடமாகவும் பிரச்சனையிலும் மாட்டிக்கொண்டு தவிக்கப் போகிறார்.
அப்பொழுதுதான் ரோகிணி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றும் வெளிவர வாய்ப்பாக அமையப் போகிறது. இதனை தொடர்ந்து கிரிஷ்க்கு நாம் தான் அப்பாவா என்று தெரிந்து விட்ட அந்த நிமிடம் மனோஜின் முகம் நாம் தான் அந்த கேனையனாய் என்று யோசிக்கும் அளவிற்கு தரமான சம்பவத்தை உண்டாக்கப் போகிறது.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- கல்யாணி வாழ்க்கையில் குட்டையை குழப்பிய முத்து
- கிரிஷ் பிறந்தநாளுக்கு போகும் மீனா முத்து
- முத்து தொடங்கிய பிசினஸ், பயத்தில் ரோகினி எஸ்கேப் ஆகும் விஜயா