வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அவசரமாய் லோகேஷ் டெல்லி பறந்ததன் பின்னணி.. கமல் கொடுத்த முக்கியமான அறிவுரை

பல முக்கிய படங்கள் வெளியாகும் போது, அந்த கதை என்னுடையது என பலர் முளைத்து விடுவார்கள். இந்த பிரச்சினை சங்கர் முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை அனைவரையும் படாதபாடு படுத்தியுள்ளது. ஒரு படம் வெற்றி படமாக அமையும் பட்சத்தில் மட்டுமே இது நடந்து வருகிறது. தோல்வி படங்களுக்கு இந்தப் பிரச்சினை நடப்பதில்லை.

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் திரைக்கு வரவிருக்கும் தன்னுடைய படம் எந்த நிலையிலும் நல்ல வெற்றி படமாக அமைந்திட வேண்டும்மென்பதில் கவனமாக இருக்கிறார் நடிகர் கமல். வருகிற ஜுன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் முதலானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் கதை இது தான் என ஒரு ஸ்கிரிப்ட் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் மற்ற படங்களை போல இந்த படம் வெளியான பிறகு கதை பிரச்சினை வந்து விடக்கூடும் என்ற சிந்தித்து லோகேஷ் கனகராஜுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார் கமல்ஹாசன். இந்த இரு வேறு பிரச்சினைகளையும் முடித்து வைக்க இந்த அறிவுரையை அவர் கூறியுள்ளார்.

டெல்லிக்கு சென்று “விக்ரம்” படத்தின் கதையை பதிவு செய்ய லோகேஷ் கனகராஜை அங்கு அனுப்பியுள்ளார் கமல். தமிழகத்திலுள்ள கதை பதிவு செய்யபட்டிருந்தால் அது இங்கு மட்டுமே பாதுகாப்பாக முடிவாக இருக்கும். ஆனால் படம் பான் இந்திய படமாக வெளியிட திட்டமிட்டுட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காகவே டெல்லிக்கு தற்போது சென்று அங்குள்ள தேசிய கதை பதிப்பிட்டாளர்கள் சங்கத்தில் அந்த கதையை பதிவு செய்ய சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் இந்த முனைப்பிற்கு பலரும் அவரை கமல் சினிமாவை பொருத்த வரை அனைத்திலும் முன்னோடி தான் என பாராட்டி வருகிறார்கள்.

இந்த படத்தில் கமலை ஃபிளாஷ் பேக்கில் இளமையாக காட்ட டீ ஏஜீங் டெக்னாலஜி என ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலின் இளமையான காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்கள் படமாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் இந்திய படம் என பெருமையையும் இந்த படம் பெருகிறது.

Trending News