புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரெட் கார்ட் கொடுத்து வெளியே தள்ளிய ஆண்டவர்.. பிக்பாஸில் நடந்த அதிரடி திருப்பம்

Biggboss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் வார இறுதி நாளுக்காக தான் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனென்றால் அந்த இரண்டு நாட்களையும் ஆண்டவர் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார். போட்டியாளர்களுக்கு குட்டு வைப்பதிலிருந்து தட்டிக் கொடுத்து பேசுவது வரை அவர் பேசும் அனைத்துமே சுவாரஸ்யம் தான்.

இது ஒரு புறம் இருக்க இந்த வார இறுதி நாளை ஆடியன்ஸ் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்தது. அதில் முக்கியமாக பிரதீப் நடந்து கொண்ட முறை அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களையே ஆட்டம் காண வைத்தது.

அதனாலேயே இன்றைய முதல் ப்ரோமோவில் ஆண்டவரின் முகம் கடுகடுப்பாக இருந்தது. அதை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப்புக்கு எதிராக மனக்குமுறல்களை கொட்டி தீர்த்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு என்ன நடக்கும் என்பது தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

Also read: யாரு சாமி நீ, இப்படி ஒரு மூளையா.? கவினை அடித்தது ஏன், உண்மையை உடைத்த பிரதீப்

சிலர் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என கூறி வந்தாலும் நிச்சயம் சம்பவம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் இப்போது பிரதீப் தன்னுடைய நடத்தையால் ரெட்கார்டு வாங்கி பிக்பாஸை விட்டு வெளியேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.

நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ள இந்த தகவல் தற்போது பிரதீப்பின் ரசிகர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது. மக்களின் நம்பிக்கையை பெற்று இறுதிப் போட்டிக்கு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் தனக்குத்தானே அவர் மண்ணை வாரி போட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் இவ்வளவு பெரிய தண்டனையை கமல் அவருக்கு கொடுத்திருக்க வேண்டாம். இருப்பினும் நாவடக்கம் இல்லாமல் அவர் நடந்து கொண்டது தான் இதற்கு காரணமாக உள்ளது. ஆக மொத்தம் இந்த வாரம் அன்னபாரதி குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேற இருக்கிறார். அது நாளை ஒளிபரப்பாக உள்ள நிலையில் இன்று பிரதீப் வெளியேறும் காட்சிகள் வர இருக்கிறது.

Also read: கதவு மூடாம பாத்ரூம் போறான், கெட்ட வார்த்தையில் அசிங்கமா பேசுறான்.. இன்று ஆண்டவர் கொடுக்க போகும் சாட்டையடி

Trending News