சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திமுக-வுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. முக்கிய புள்ளியை எதிர்க்க தயாராகும் கமல், எந்த தொகுதி தெரியுமா.?

Kamal-DMK: சினிமா, அரசியல் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் கமல் திமுகவுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் கமலின் அண்மைக்கால நகர்வுகளும் திமுகவுடன் கைகோர்ப்பார் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதன்படி திமுகவுடன் அதிக நெருக்கம் காட்டும் கமல் ஈரோடு தேர்தலில் கூட தாமாக முன்வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும் தற்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வர இருக்கும் எம்பி தேர்தல் பற்றி தான் பேசி வருகிறார். அதில் கூட்டணி பற்றிய மறைமுக தகவலையும் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாஜக தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மற்றொரு பக்கம் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பலமும் அதிகரித்திருக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யமும் இணைந்தால் அந்தக் கூட்டணி இன்னும் வலுவடையும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Also read: கமலுக்கு வைக்கப்பட்ட செக்.. சூதனமாக நடந்து கொண்ட வாரிசுகள்

அதேபோன்று இந்த கூட்டணிக்கான ஆதரவு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கமல் வர இருக்கும் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாராம். இதில் என்ன ஒரு சுவாரஸ்யம் என்றால் அதே தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் போட்டியிட உள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே பலமான போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை கமலுக்கு கோயம்புத்தூர் தொகுதி கிடைக்கவில்லை என்றால் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புகள் இருக்கிறதாம். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வருகிறது.

மேலும் கமல் திமுகவிடம் 3 இடங்களை தங்கள் கட்சிக்காக ஒதுக்கவும் பேசி இருக்கிறார். அதன்படி கோயம்புத்தூர், மதுரை, வடசென்னை இடங்கள் கமலுக்காக ஒதுக்கப்படலாம் என்கின்றனர். மேலும் கமலின் கூட்டணி இருந்தால் அது திமுக, காங்கிரஸுக்கு நிச்சயம் ஒரு பலமாக இருக்கும். கமலுடைய பேச்சை கேட்பதற்காகவும், பார்ப்பதற்காகவும் மக்கள் கூடுவார்கள்.

Also read: வினோத்துடன் ஆன கூட்டணியை முறித்துக் கொண்ட கமல்.. மணிரத்தினத்தால் ஏற்பட்ட விளைவு

இதனாலேயே திமுக இந்த கூட்டணியை உறுதிப்படுத்த காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கமலுக்கு மத்திய அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும் என்ற அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறதாம். ஆக மொத்தம் தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கும் கமல் வெற்றிவாகை சூடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News