Bigg Boss: கமலஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கப் போவதை முக்கிய நபர் ஒருவர் உறுதி செய்து இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல் என்றால் பிக் பாஸ், பிக் பாஸ் என்றால் கமல் இப்படித்தான் தமிழக மக்களுக்கு மனசோடு ஒன்றி போய்விட்டது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான் எட்டாவது சீசனை கமல் தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியானது. அதையும் கமலே விஜய் டிவிக்கு முன்னாடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த சீசனில் அவர் எதிர்கொண்ட எதிர்மறை விமர்சனங்கள் தான் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்பட்டது.
பிக்பாஸுக்கு என்ட்ரி கொடுக்கும் கமல்
கமலிடத்தை யார் நிரப்ப போகிறார் என்ற கேள்வி தமிழ்நாட்டில் பெரிய அளவில் வைரலானது. அந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து பொருந்தினார் விஜய் சேதுபதி. நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் விஜய் சேதுபதியின் நெறிமுறை மீதும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என விமர்சனங்கள் கலந்து படி தான் இருக்கின்றன.
இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவை தங்கவேலு இன்று பரபரப்பான தகவல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் கமலஹாசன் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் கோர்ஸ் ஒன்றை படிக்கப் போகிறதால்தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகி இருந்தார் என்ற அறிவிப்பை சொல்லியிருக்கிறார். கமல் இந்த சீசனிலேயே உள்ளே வருவாரா அல்லது அடுத்த சீசனில் இருந்து தொகுத்து வழங்குவாரா என்பது இனி தான் தெரியும்.