செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வடிவேலு கமலுடன் சேர்ந்து நடித்த மூன்றே படங்கள்.. இசக்கி ஆக உலக நாயகனைக் கவர்ந்த கதாபாத்திரம்

Kamal Haasan – Vadivelu: பொதுவாக உலக நாயகன் கமலஹாசனின் படங்களில் அவ்வளவாக முன்னணி காமெடி நட்சத்திரங்கள் நடிப்பது கிடையாது. இதற்கு காரணம் காமெடி காட்சிகளையும் படத்தின் போக்கோடு ஒன்றிணைத்து கொண்டு செல்வதையே கமல் அதிகம் விரும்புவார். இதனால் தான் அவருடைய படங்களில் பெரும்பாலும் தனியான காமெடி டிராக்குகள் இருக்காது.

கமல் மற்றும் கிரேசி மோகன் கூட்டணியில் வரும் படங்களில் அத்தனையுமே எதார்த்தமான காமெடி காட்சிகள் ஆகத்தான் இருக்கும். இதை தவிர்த்து கமல் 90களின் காலகட்டத்தில் மட்டுமே கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். இதில் வடிவேலுவுடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

Also Read:வேணாம்பா உங்க ப்ராஜெக்ட்-ன்னு கமலுக்கு குட்பை சொன்ன இயக்குனர்.. பல்லை பிடித்து பார்த்த உலகநாயகன்

வடிவேலுவுடன் ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்த கமலஹாசன், அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்து இருக்கிறார். தற்போது கூட தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதில் கண்டிப்பாக வைகைப்புயல் வடிவேலு, கமலுடன் சேர்ந்து நடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிங்கார வேலன்: கமலஹாசன், குஷ்பூ இணைந்து நடித்த படம் தான் சிங்காரவேலன். ஹீரோயினை தேடி சென்னை வரும் கமலுக்கு உதவி செய்யும் நண்பர்கள் குழுவில் பாடகர் மனோ, கவுண்டமணி, வடிவேலு ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் வடிவேலு பேசிய’ சட்டை மேலே எவ்ளோ பட்டன்’ என்ற வசனம் கூட இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறது.

Also Read:முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்

தேவர் மகன்: சிங்காரவேலன் திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கமல், வடிவேலுக்கு கொடுத்த வாய்ப்புதான் தேவர் மகன். இன்றளவும் தமிழ் சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த படத்தில் வடிவேலு இசக்கி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படம் ரிலீஸ் ஆகி 30 வருடங்களுக்கு மேலாகியும் இந்த கேரக்டர் இன்றுவரை பேசப்படுகிறது.

காதலா காதலா: அவ்வை சண்முகி வெற்றிக்கு பிறகு கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய ஹிட் காமெடி திரைப்படம் காதலா காதலா. கமல் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பல நட்சத்திரங்கள் நடித்த முழு நீள நகைச்சுவை படமான இந்த படத்தில் வடிவேலு சிங்காரம் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார்.

Also Read:இதுவரை தேசிய விருதை தட்டி தூக்கிய 6 ஹீரோக்கள்.. மூன்று முறை வென்ற உலக நாயகன்

Trending News