வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

தனுஷை அசால்டாக பங்கம் பண்ணிய கமல்.. இதெல்லாம் மேடையில் சொல்ற விஷயமா ஆண்டவரே!

Dhanush: அமரன் பட வெற்றி விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

மேடையில் கமலஹாசன் நடிகை சாய் பல்லவி பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்து இருந்தார். அதாவது அமரன் படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் எல்லோரும் என்ன ரௌடி பேபி என்று சொல்லிட்டு இருந்தாங்க.

தனுஷை அசால்டாக பங்கம் பண்ணிய கமல்

ஆனா அமரன் படம் ரிலீஸ் ஆன பிறகு என்ன வேற மாதிரி பாக்குறாங்க, நன்றி சார் என்று சொல்லி இருந்தார். அதற்கு நான் அந்த சின்ன தோல்வி அடைந்த படத்திலேயே உங்கள் கேரக்டர் தனித்துவமாக நான் தெரிந்தது.

அந்த அளவுக்கு நீங்கள் திறமையானவர் என பதில் சொன்னேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே பிரேமம் படம் மூலம் மலர் என்ற கேரக்டரில் சாய் பல்லவி எடுத்த பெயரை தனுஷ் மாரி படத்தின் மூலம் மொத்தமாக டேமேஜ் செய்து விட்டார் என ரசிகர்கள் குறை கூறுவது உண்டு.

அதற்கு இப்போது தீனி போட்டு இருக்கிறார் கமலஹாசன்.

Trending News