வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு கமல் செய்யும் வாதம்.. சங்கருக்கு வந்த கடும் நெருக்கடி

கமல் சகலகலா வல்லவன் என்ற பெயருக்கு தகுந்தவர்தான். உலகநாயகன், ஆண்டவர், சகலகலா வல்லவன் என ரசிகர்கள் இவரை அழைத்து வருகின்றனர். கமல் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார். திரையுலகில் புதிதாய் வந்த ஏ ஐ டெக்னாலஜியை பயின்று வருகிறார்.

கமல் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் அட்டர் ஃபிளாப் ஆகியது. இதனால் பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு பெரும் அவப்பெயர் வந்தது. இதுவரை சங்கர் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கியவர்கள் எல்லாரும் சற்று பின் வாங்கினார்கள்.

இந்தியன் 2 படத்தால் சங்கர் இயக்கி வந்த கேம் சேஞ்சர் பட வியாபாரத்திற்கு பல கேள்விகள் எழுந்து வருகிறது. சங்கர் படத்திற்கு இப்படி ஒரு நிலமை என்பது புரியாத புதிராய் தான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படம் எடுக்கும்போதே, இந்தியன் மூன்றாம் பாகத்துக்கும் அடித்தளம் போட்டு கிட்டத்தட்ட 40 சதவீதம் எடுத்துள்ளனர்.

இந்தியன் 2 படம் சரி வர போகாததால் இந்தியன் 3 படம்வியாபாரம் ஆகவில்லை. யாரும் அதை பெருந்தொகை கொடுத்து வாங்குவதற்கு முன் வரவில்லை. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனம் இந்த படத்தை ஓடிடி யில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் இது கமல் மற்றும் ஷங்கருக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. இவ்வளவு செலவழித்து ஒரு படம் எடுத்து அதை ஓடிடியில் விடுவதா என்று யோசித்து வருகின்றனர். கமல் என்னிடமா விளையாடுகிறார்கள் என்று இப்பொழுது இந்தியன் மூன்று படத்திற்கு டப்பிங் பேசாமல் கெத்து காட்டி வருகிறார்.

ஹீரோ இல்லாமல் எப்படி படத்தை ரிலீஸ் \செய்வீர்கள் என மொத்த குடிமியையும் பிடித்த கமலஹாசன் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என கங்கணம் கட்டி தெரிகிறார். இதனால் இப்பொழுது லைக்கா நிறுவனம் பெரிய மண்டை அடியில் உள்ளது

Trending News