Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரஜினி ரூட்டெல்லாம் சரிப்பட்டு வராது.. விண்வெளி நாயகன் வேணாம் உலக நாயகன் தான் வேணும்

ரஜினி ரூட்டெல்லாம் சரிப்பட்டு வராது.. விண்வெளி நாயகன் வேணாம் உலக நாயகன் தான் வேணும்

Rajini-Kamal: சோசியல் மீடியாவை திறந்தாலே ரசிகர்களின் சண்டைகள் தான் பெரிதாக இருக்கிறது. அரசியல் சண்டை ஒரு பக்கம் என்றால் ரஜினி, கமல் தொடங்கி சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என லிஸ்ட் பெருசாக இருக்கிறது. அதில் ஆரம்பகாலத்தில் இருந்து ரஜினி […]

Rajini-Kamal: சோசியல் மீடியாவை திறந்தாலே ரசிகர்களின் சண்டைகள் தான் பெரிதாக இருக்கிறது. அரசியல் சண்டை ஒரு பக்கம் என்றால் ரஜினி, கமல் தொடங்கி சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என லிஸ்ட் பெருசாக இருக்கிறது.

அதில் ஆரம்பகாலத்தில் இருந்து ரஜினி கமல் ரசிகர்களுக்கிடையே வாய்க்கா தகராறு தான். சம்பந்தப்பட்ட நடிகர்கள் கைகோர்த்துக் கொண்டு ஒன்றாக மேடையில் தோன்றினாலும் கூட ரசிகர்களின் அக்கப்போர் முடிவதில்லை.

ஆனால் உண்மையிலேயே கமலுக்கு ரஜினி அளவுக்கு கமர்சியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வருட கணக்கில் இருக்கிறது. இதை பல சினிமா விமர்சகர்கள் பத்திரிகையாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ரஜினி ரூட்டெல்லாம் சரிப்பட்டு வராது

ஆனால் அவர் சகலகலா வல்லவன். இந்த கேரக்டர் தான் அவருக்கு செட் ஆகும் என்று சொல்ல முடியாது. எல்லா வகையான கதாபாத்திரங்களையும் நடித்து ஆச்சரியப்படுத்தி விடுவார்.

ஆனாலும் அவ்வப்போது கமர்சியல் படத்தில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்துவிடும். ஆனால் அது எப்போதாவது தான் மக்களால் அங்கீகரிக்கப்படும். அப்படித்தான் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.

நான்கு வருடம் கழித்து நடித்த அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. உடனே ஆண்டவர் அதே போல் ஹிட் கொடுக்க வேண்டும் என இந்தியன் 2, தக் லைஃப் என வரிசை கட்டினார்.

ஆனால் அந்தப் படங்கள் பல்பு வாங்கி விட்டது. இதனால் மீண்டும் அவர் தன்னுடைய பாணியில் முயற்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் அப்படித்தான் எங்களுக்கு வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.

நடுநிலையான ஆடியன்ஸ் கூட இந்த விண்வெளி நாயகன் எல்லாம் வேண்டாம். உலக நாயகன் தான் வேண்டும். அதிலும் அவருடைய பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் தொடங்கி மகாநதி, அன்பே சிவம் என பல படங்கள் சொல்லலாம்.

இதில் அவர் ஹீரோ என்பதை தாண்டி கதாபாத்திரமாக உருமாறி இருப்பார். அது ரசிகர்களுக்கும் இப்போதும் பிடித்தமான படங்கள். அதனால் இந்த கமர்ஷியல் ஆசையை விட்டுவிட்டு தன்னுடைய பாணியில் படம் கொடுத்தால் ரசிகர்கள் அதை ரசிப்பதற்கு தயாராக இருக்கின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.