கல்கி படம் ஜூன் 27 உலகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் கமல் வில்லனாக மிரட்டி இருக்கிறாராம். இரண்டு பாகங்களாகவும் கல்கி படம் வெளிவர இருக்கிறது.இந்த இரண்டுக்கும் சேர்த்துதான் ஆரம்பித்திலேயே அக்ரிமெண்ட் போட்டு கமலுக்கு 150 கோடிகள் சம்பளம் கொடுத்தனர்.
முதல் பாகத்தில் வெறும் இருபது நிமிடங்கள் மட்டுமே கமல் வருகிறாராம். இரண்டாம் பாகத்தில் கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் இவர் போஷன் இருக்கிறதாம். கமலை தவிர இந்த படத்தில் அமிதாப்பச்சன், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா போன்றவர்களும் நடிக்கிறார்களாம்.
இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் கமல் ஓவராக உதயநி திதலையில் ஐஸ் வைக்கும்படி பேசினார். அன்புத்தம்பி நிறைய உதவி செய்திருக்கிறார், அவருக்காக நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்றெல்லாம் ஆண்டவர் அவிழ்த்து விட்டார். அதற்கெல்லாம் இப்பொழுதுதான் விடை கிடைத்திருக்கிறது.
கல்கி படம் கிட்டத்தட்ட 750 கோடியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய நிறைய பேர் போட்டி போட்டு வருகிறார்கள். ஆனால் படக்குழு இது பெரிய பட்ஜெட் படம் ஆகையால், வாங்குவதற்கு முன்பே நீங்கள் ஒரு பெரும் தொகையை கொடுத்து தான் இந்த படத்தை விநியோகம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.
புகழ் பாடி ஆண்டவர் கிண்டப் போகும் அல்வா
ரெட் ஜெயன்ட் மூவிஸை பொருத்தவரை ஆரம்பத்தில் அவர்கள் எல்லா படங்களையும் ஃப்ரீயாக விநியோகம் செய்து, பின்னர் கிடைக்கும் லாபத்தை கொடுப்பார்கள். ஆனால் கல்கி படத்தில் இது எடுபடவில்லை, அவர்கள் பெரும் தொகையை முன்னரே கேட்கின்றனர். இங்கே தான் ஆண்டவர் தன்னுடைய வேலையை காட்டியுள்ளார்
உதயநிதி இருக்கிறார் அவர் தமிழ்நாட்டில் கல்கி படத்தை விநியோகம் செய்வார் என ரெட் ஜெயன்ட் மூவீஸ்க்கு கடும் சிபாரிசு செய்து வருகிறார் கமல். எப்படியும் உதயநிதி இடமிருந்து ஒரு பெரும் தொகையை ஆரம்பத்திலேயே கல்கி படத்திற்காக வாங்கி விடலாம் என மனக்கோட்டை கல்கி படத்திற்கு ஹைப் ஏற்றி வருகிறார்.
சினிமாவை விட்டு விலகியும் உதயநிதியை துரத்தும் பிரச்சனை
- மூன்று துருவங்களையும் சேர்த்து வைத்து சாதித்த உதயநிதி
- உதயநிதிக்கு கிடைத்த மூன்றாவது கை
- நம்ப வைத்து துரோகம் செய்த கமல்