புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அட்லீயை அசிங்கப்படுத்திய கமல்.. விஜய் காதுக்கு சென்ற விஷயத்தால் இன்று வரை இருக்கும் வெறுப்பு

தளபதி விஜய் மற்றும் கமல்ஹாசன் இடையே ஏதோ மனக்கசப்பு பல வருடங்களாக இருந்து வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் என்றால் அது அட்லீ தான். அதாவது தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை விஜய்க்கு கொடுத்துள்ளார்.

மேலும் இவர்களது கூட்டணியில் ஒரு படம் கண்டிப்பாக வருங்காலங்களில் உருவாக உள்ளது. விஜய் அட்லியை ஒரு இயக்குனராக மட்டும் பார்க்காமல் தனது குடும்பத்தில் ஒருவராகத் தான் பாவித்து வருகிறார். மேலும் அட்லியின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

Also Read : விஜய் பட தோல்வியிலிருந்து மீட்டெடுத்த லவ் டுடே பிரதீப்.. அதிர்ச்சி தகவலை கூறிய தயாரிப்பாளர்

இந்நிலையில் அட்லீயை கமல் அசிங்கப்படுத்தியதால் தான் விஜய் தற்போது வரை உலகநாயகன் மீது வெறுப்புடன் உள்ளார். பொதுவாக அட்லீ மீது தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதாவது முன்பு வெளியான படங்களை காப்பி அடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அட்லீயின் முதல் படமான ராஜா ராணி படம் கூட மௌன ராகம் படத்தின் காப்பி என சொல்லப்பட்டது. இப்போது ஜவான் படத்தின் போஸ்டர், டீசர் வெளியான போது கூட இதே சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மெர்சல் படம் வெளியான போது அட்லீயை தனது வீட்டிற்கு கமல் அழைத்துள்ளார்.

Also Read : விஜய்க்கு போட்டியாக வசூல் மன்னனாக களமிறங்கும் சூர்யா.. லியோ படத்தை விட அதிக லாபத்தை பார்த்த ரோலக்ஸ்

அங்கு கமல் மற்றும் அட்லீ அமர்ந்து பேசும் இடம் முழுக்க அபூர்வ சகோதரர்கள் படத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாம். காரணம் மெர்சல் படம் வெளியான போது இந்த படம் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என பேசப்பட்டது. இதை சூசகமாக கமல் தனது வீடு முழுக்க அந்த படத்தின் புகைப்படங்களை வைத்து உள்ளார்.

இந்த விஷயம் எப்படியோ விஜய்யின் காதிற்கு சென்றுள்ளது. தன்னுடைய இயக்குனரை கமல் வீட்டிற்கு கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்தி விட்டாரே என இன்று வரை கமலின் எந்த ஒரு விஷயத்திலும் தளபதி ஈடுபடுவதில்லை. கமலே தன்னுடைய படத்தில் நடிக்க கூப்பிட்டாலும் வேண்டாம் என விஜய் மறுத்து விட்டாராம்.

Also Read : அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

Trending News