செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமலுக்கு ஒரே படத்தில் 100 கோடி சம்பாதிச்சு கொடுப்பேன்.. லோகேஷ் கூறிய ஷாக்கான காரணம்

சிறுவயதிலிருந்தே உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவரை பார்த்து தான் சினிமாவுக்கு வந்ததாக அவர் பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த வகையில் தன் குருநாதரை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலக அளவில் பல சாதனைகள் செய்தது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து கமலை திரையில் பார்த்த அவருடைய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதேபோன்றுதான் லோகேஷ் தியேட்டரில் கமல் வரும் அந்த காட்சிகளில் கைத்தட்டி ஆரவாரம் செய்தாராம். ஒரு ரசிகராக மட்டுமே அந்த படத்தை பார்த்து ரசித்ததாக அவர் கூறியுள்ளார்.

Also read:என் படத்துல போதை, சரக்கு வைக்க இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லோகேஷ்

மேலும் இந்தப் படத்தை இயக்குவதற்கு அவர் தயாரான போது ராஜ்கமல் நிறுவனத்திற்கு எப்படியாவது 100 கோடி சம்பாதித்து தர வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் வந்தாராம். ஏனென்றால் கமல் ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அவரை ஒரு நடிகராக நிரூபிக்க நான் வரவில்லை.

அவரிடம் 100 கோடி ரூபாய் இருந்தால் அதை அவர் ரியல் எஸ்டேட்டில் போட மாட்டார் சினிமாவில் தான் போடுவார். அதன் மூலம் பல இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிறு வயதிலிருந்து நான் பார்த்து ரசித்த என் தலைவனுக்கு இதுதான் நான் கொடுத்த பரிசு என்று மனம் திறந்து கூறியுள்ளார். அந்த வகையில் விக்ரம் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக 500 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.

Also read:கமல் கேரியரில் நடித்த ஒரே ஒரு மோசமான படம்.. இயக்குனருக்கு உதவ நினைத்ததால் ஏற்பட்ட சங்கடம்

லோகேஷ் கூறியபடியே கமல் தற்போது அந்த லாபத்தை எல்லாம் மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்ய இருக்கிறார். அதன் அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது படுஜோராக நடந்து வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக பட்டையை கிளப்பி வரும் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் சிம்புவும் அவர் தயாரிப்பில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் லோகேஷன் ஆசை அவருடைய குருநாதரால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Also read:இந்தியன் 2 படத்தில் சிக்கலை ஏற்படுத்திய சிபிஐ கேரக்டர்.. ஷங்கரை காப்பாற்றிவிட்ட நடிகர்

Trending News