சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சின்ன கல்லு பெத்த லாபம்.! நம்பமுடியாத காந்தாரா பட மொத்த வசூல், விக்ரமை தாண்டிருவாங்க போல

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. சமீபத்தில் தமிழ் மொழியில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வசூல் வேட்டையாடும் லவ் டுடே போல ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படமும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பிரம்மாண்டமான வெற்றியடைந்தது.

காந்தாரா படம் மொத்தமாக 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. முதலில் கன்னட மொழியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியானது. அப்படி எல்லாம் மொழிகளிலுமே இந்த படத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைத்தது.

Also Read பாக்ஸ் ஆபிஸில் அசுர வேட்டையாடும் காந்தாரா மொத்த வசூல்.. ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

இதனால் காந்தாரா படத்திற்கு அதிக திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கே ஜி எஃப் படத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து இருந்தது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காந்தாரா படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரிஷப் ஷெட்டியை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் இந்த மாதம் அமேசான் பிரைம் ஓடிடியில் காந்தாரா படம் வெளியாக உள்ளது. இப்போதே திரையரங்குகளில் கிட்டத்தட்ட 400 கோடி வசூல் செய்து வெறித்தனமான வெற்றியடைந்துள்ளது.

Also Read : காந்தாரா போல மிஸ் பண்ண கூடாத 7 படங்கள்.. ஹாலிவுட் படங்களுக்கு டப் கொடுத்த ஆரண்ய காண்டம்

பெரிய பட்ஜெட் படங்களே இந்த அளவுக்கு வசூல் செய்யுமா என்பது சந்தேகம்தான். ஆனால் சிறிய கல்லில் பெத்த லாபம் பார்த்துள்ளது காந்தாரா படம். கர்நாடகாவில் இந்தப் படம் 168.50 கோடி வசூல் செய்துள்ளது. ஆந்திராவில் கிட்டத்தட்ட 60 கோடி காந்தாரா படம் வசூல் செய்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 12.70 கோடியும், கேரளாவில் 19.20 கோடியும் வசூலை அள்ளி உள்ளது. மேலும் வெளிநாடுகளில் 44.50 வட இந்தியாவில் 96 கோடி காந்தாரா படம் மொத்தமாக வசூல் செய்துள்ளது. இதனால் தற்போது படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : காந்தாரா பூத கோலா நடனம் ஆடுவதற்கு ஏற்ற தமிழ் நடிகர்.. ரஜினியே பார்த்து மிரண்டு போன ஆட்டம்

Trending News