வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூட்டிங் ஸ்பாட்டில் 30 பேருடன் கங்கனா அட்டூழியம்.. அல்லோலப்படும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு

ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் லாரன்ஸ், ராதிகா, வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறாராம். அதாவது நல்ல அழகு மற்றும் சிறந்த நடிப்பு திறமைக்கு பெயர் பெற்று அரசவையில் நடனமாடும் கலைஞராக நடிக்க உள்ளாராம். இவரது கதாபாத்திரம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

Also Read : நயன்தாராவுக்கு டைம் கிடைச்சா, கூட நடிக்க வரணுமா? லாரன்ஸை நிஜ சந்திரமுகியாக மாற்றிய லேடி சூப்பர் ஸ்டார்

ஆனால் கங்கனா சூட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கும் அட்ராசிட்டி தான் தாங்க முடியவில்லை என பலரும் புலம்பி வருகிறார்களாம். அதாவது 30 பேருடன் தான் கங்கனா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறாராம். மேக்கப், காஸ்டியூம், சமையல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஆட்கள் வைத்துள்ளாராம்.

இவற்றுக்கெல்லாம் மேலாக சந்திரமுகி படப்பிடிப்புக்கு தனி விமான மூலம் தான் வந்து இறங்குகிறாராம். இப்போது சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூட்டிங் ஸ்பாட்டில் நடைபெறுகிறது.

Also Read : 5 மொழி படத்தில் அதிக சம்பளம் கேட்ட பிரபல நடிகை.. வாய்ப்பை பிடிங்கி கங்கனா ரனவத்துக்கு கொடுத்த படக்குழு!

ஆகையால் அங்கு பெரிய பெரிய பிரபலங்கள் தங்கும் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்று உள்ளதாம். அங்குதான் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பெரும்பாலானோர் தங்குகிறார்களாம். ஆனால் இந்த ஹோட்டலில் கங்கனா தங்குவது இல்லையாம்.

இதற்கு மாறாக அவருடைய அசிஸ்டன்ட் தான் அங்கு தங்கி இருக்கிறாராம். மேலும் கங்கனா அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு மேலான சிட்டிக்குள் மிகப்பெரிய ஹோட்டலில் தங்குகிறாராம். இவ்வாறு கங்கனாவின் ஓவர் அலப்பறையால் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளம் அல்லோலபடுகிறதாம்.

Also Read : சமந்தா விவாகரத்துக்கு காரணமே அந்த நடிகர்தான்.. வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சிய கங்கனா

Trending News