செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினி வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருப்பார். இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் முந்தைய படங்களான முனி, காஞ்சனா என த்ரில்லர் மூவியில் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து இப்படத்திலும் வேட்டையனாக மிரள வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சந்திரமுகி ஆக கங்கனா ரனோட் நடித்து வருகிறார். இவர் தமிழில் தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருந்தார்.

Also read: ரஜினியே அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என கூறிய ஒரே நடிகர்.. தலைமையை வாரிக் கொடுத்த தலைவர்

இதையடுத்து அவர் அரவிந்த்சாமி உடன் தலைவி என்ற படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து நடித்திருந்தார். தற்போது இவர் முதல் இயக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து ஹிந்தியில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் தமிழ் படம் சந்திரமுகி 2.

இப்பொழுது இந்த நடிகையால் சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருகிறதாம். இவர் எங்கே போனாலும் எப்பொழுதுமே ஒரு கூட்டத்துடன் தான் போவாராம். இப்படி படப்பிடிப்பிற்கும் ஜிம் பாய்ஸ், மேக்கப் மேன், என இவர் கூடவே இந்த கூட்டத்தையும் ஏற்பாடு செய்து கூட்டிட்டு வருவாராம். அது மட்டுமல்லாமல் இவரின் பாதுகாப்பிற்காக சி ஆர் பி எஃப் வீரர்கள் என்று நான்கு பேர் துப்பாக்கியுடன் எப்பொழுதுமே இவரை சுற்றி இருப்பார்கள்.

Also read: பொன்னியின் செல்வனை மிஞ்சிய கெட்டப்பில் கங்கனா ரனாவத்.. சந்திரமுகியாக வாங்கிய சம்பளம்

இதெல்லாம் பார்த்த பட குழுவினர் விசாரிக்கும் போது எல்லாமே இவருடைய ஏற்பாடு தான் என்று தெரியவந்தது. இந்த ஏற்பாட்டின் பின்னணி இவர் வாயால் நிறைய பிரச்சனைகளை தேடிப்போய் மாட்டிக் கொள்வாராம். அதனால் இவரின் பாதுகாப்பு கருதி சி ஆர் பி எஃப் வீரர்களுடன் சூட்டிங் வந்து கொண்டிருக்கிறார். இதனால் பட குழுவில் நிறைய குளறுபடிகள் நடந்து வருகிறது.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பட குழுவினர் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காரணத்தினாலே படப்பிடிப்பிற்கு பெரும் பின்னடைவாக இருக்கிறதாம். இந்த பிரச்சனை எல்லாம் கடந்து இயக்குனர் சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

Trending News